For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நான் எனது ரூமை விட்டு வெளியே வர்றதே இல்லை.. தொடர் தோல்விகளால் மனமுடைந்த அந்த அதிரடி வீரர்

கொல்கத்தா:தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் நான், இப்போது எனது ஓய்வறையை விட்டு வெளியே வருவதில்லை என்று கொல்கத்தா அணி ஆல் ரவுண்டர் ரசல் வேதனையுடன் கூறியுள்ளார்.

யாரும் எதிர்பாராத வகையில், வருட ஆரம்பத்தில் கொல்கத்தா அணி அனைத்து அணிகளுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. ஐபிஎல் தொடரை கைப்பற்றும் அணியும் கொல்கத்தா அணிதான் என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.

ஆனால்... நடந்தது என்னவோ வேறு. கொல்கத்தா அணி கடைசியாக பங்கேற்ற 6 போட்டிகளிலும் தொடர்ச்சியாக தோல்வியை தழுவியது. இந்த மோசமான தோல்விக்கு காரணத்தினை தற்போது அந்த அணியின் அதிரடி வீரரான ரசல் வெளியிட்டுள்ளார்.

அஸ்வினை வைத்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் சென்னை காவல்துறை.. பார்த்து சிரித்த ஆஸி. வீராங்கனை! அஸ்வினை வைத்து வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் சென்னை காவல்துறை.. பார்த்து சிரித்த ஆஸி. வீராங்கனை!

 தொடரும் தோல்விகள்

தொடரும் தோல்விகள்

அணியின் நடவடிக்கையால் பெரும் வேதனை அடைந்துள்ளதாக அவர் கூறி உள்ளார். தொடர்ந்து அவர் கூறுகையில், எங்களது அணி சிறப்பான அணிதான். ஆனால், வீரர்களின் தேர்வு சரியாக நடக்காததால் எங்கள் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

பவுலர்கள்

பவுலர்கள்

மற்ற அணிகளில் பொதுவாக பேட்டிங் குறைபாடு இருக்கும். ஆனால், எங்களது அணியில் சரியான பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து இருந்தால் பல போட்டிகளில் நாங்கள் ஜெயித்திருப்போம்.

 வீரர்கள் சோர்வு

வீரர்கள் சோர்வு

அதுபோன்று பீல்டிங் மிக மோசம். நிறைய கேட்ச்கள் மற்றும் ரன்களை எங்களது வீரர்கள் கோட்டை விடுகின்றனர். தொடர் தோல்விகளால் எங்களது அணி வீரர்கள் மிகுந்த சோர்வுடன் உள்ளனர்.

 மிகுந்த மனக்கஷ்டம்

மிகுந்த மனக்கஷ்டம்

ஓய்வறையிலும் சுமூகமான சூழல் இல்லை. அதனால் நான் மிகுந்த மன கஷ்டத்துடன் இருக்கிறேன். மேலும் நான் எனது அறையை விட்டு வெளியே வருவதில்லை என்று ரசல் கூறினார்.

 மும்பையுடன் சந்திப்பு

மும்பையுடன் சந்திப்பு

கொல்கத்தா அணி வீரர்களின் நிலை குறித்து இப்படி ரசல் ஓப்பனாக கூறியிருக்கிறார். இந்த நிலையில் இன்று கொல்கத்தா அணி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை மோதியுள்ளது. இதில் மும்பை அணி 18 முறை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, April 28, 2019, 13:29 [IST]
Other articles published on Apr 28, 2019
English summary
I find myself just being in my room for the last couple of days says Russell.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X