For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் பாய், ஆர்சிபி... எல்லா புகழும் அவங்களுக்குதான் போகணும்... சிராஜ் சகோதரர் நெகிழ்ச்சி

டெல்லி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின்மூலம் தனது சர்வதேச முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கி விளையாடினார் முகமது சிராஜ்.

இறுதி மற்றும் 4வது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

ஜெயிக்க முடியாம போச்சே.. ஏமாந்த ஹைதராபாத்.. போராடி டிரா செய்த ஒடிசா!ஜெயிக்க முடியாம போச்சே.. ஏமாந்த ஹைதராபாத்.. போராடி டிரா செய்த ஒடிசா!

இந்நிலையில் சிராஜின் வெற்றிக்கான புகழ் அனைத்தும் கேப்டன் விராட் கோலி மற்றும் ஆர்சிபி அணிக்கே செல்ல வேண்டும் என்று அவரது சகோதரர் இஸ்மாயில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இமாலய சாதனை

இமாலய சாதனை

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டு இமாலய சாதனை படைத்துள்ளது. கடந்த 2018-19 தொடர் வெற்றியின் வரலாறு மீண்டும் இந்திய அணியின் கைகளில் வந்துள்ளது. அணியில் முக்கிய வீரர்கள் இல்லாத நிலையிலும் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

சிராஜ் அபாரம்

சிராஜ் அபாரம்

இந்நிலையில் இந்த தொடரின்மூலம் தனது சர்வதேச முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கி விளையாடினார் முகமது சிராஜ். அவர்மீது தேர்வாளர்கள் வைத்த நம்பிக்கையை அவர் பொய்யாக்கவில்லை. கடந்த 4வது டெஸ்ட் போட்டியில் மட்டுமே 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் தொடர் வெற்றிக்கும் சிராஜ் காரணமாக அமைந்தார்.

விராட், ஆர்சிபி காரணம்

விராட், ஆர்சிபி காரணம்

இந்நிலையில் சிராஜின் இந்த சாதனைகளுக்கு முக்கிய காரணமாக கேப்டன் விராட் கோலி மற்றும் ஆர்சிபி அணியே உள்ளதாக அவரது சகோதரர் முகமது இஸ்மாயில் பாராட்டு தெரிவித்துள்ளார். விராட் கோலி சிராஜிக்கு பக்கபலமாக தொடர்ந்து இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து தக்க வைத்தனர்

தொடர்ந்து தக்க வைத்தனர்

மேலும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் சிராஜிற்கு பக்கபலமாக இருந்து ஆர்சிபி மற்றும் விராட் கோலி, அவரை அணியில் தொடர்ந்து தக்க வைத்ததையும் இஸ்மாயில் சுட்டிக் காட்டினார். அவர்கள் சிராஜ்மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

Story first published: Wednesday, January 20, 2021, 13:49 [IST]
Other articles published on Jan 20, 2021
English summary
Even when Siraj was not performing well in IPL, RCB backed him and retained him -Ismail
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X