இந்த டெக்னிக்கை நான் அஸ்வின்கிட்டே இருந்து தான் கத்துக்கிட்டேன்..! ஒரு பவுலரின் ஓபன் டாக்..!

பர்மிங்ஹாம்: இங்கிலாந்து மைதானங்களில் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்பதை அஸ்வினிடம் இருந்து கற்றுக் கொண்டேன் என்று ஆஸ்திரேலிய பவுலர் நாதன் லயன் கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையே பாரம்பரிய மிக்க ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி பர்மிங்காமில் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கியது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 284 ரன்களை குவித்தது. ஸ்டீவ் ஸ்மித் அற்புதமாக சதம் அடித்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பிறகு இங்கிலாந்து அணி தமது இன்னிங்சை தொடங்கியது.

பவுலிங் கஷ்டம்

பவுலிங் கஷ்டம்

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளரான நாதன் லயன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: இங்கிலாந்து போன்ற வெளி நாட்டு மைதானங்களில், குறிப்பாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் மைதானங்களில் பந்து வீசுவது கடினம்.

அசந்து போனேன்

அசந்து போனேன்

ஆனால் நான் இந்திய அணியின் வீரரான அஸ்வின் இது போன்ற வெளிநாட்டு தொடர்களில் பந்துவீசும் போது அவரின் பவுலிங்கை பார்த்து அசந்து உள்ளேன். ஏனெனில் அஸ்வின் அந்த அளவுக்கு அது போன்ற மைதானங்களில் சிறப்பாக பந்து வீசுவார்.

கற்றுக் கொண்டேன்

கற்றுக் கொண்டேன்

அவரின் பந்துவீச்சு வீடியோக்களை பார்த்து தான் நான் இங்கிலாந்து மைதானங்களில் எவ்வாறு பந்து வீச வேண்டும். பந்து வீச்சில் வேரியேஷன் எந்தெந்த வகையில் வீச வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன்.

343 விக். வீழ்த்தி அபாரம்

343 விக். வீழ்த்தி அபாரம்

இது தொடர்பாக, குறித்து நான் அஸ்வினிடமும் பலமுறை பேசி உள்ளேன் என்று லயன் கூறினார். இதுவரை 343 டெஸ்ட் விக்கெட்டுகளை நாதன் லயன் வீழ்த்தியுள்ளார். லயனை விட ஒரு விக்கெட்டை அஸ்வின் குறைவாகவே எடுத்து உள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
I have learned bowling techniques from Ashwin says Australian bowler Nathan lyon.
Story first published: Saturday, August 3, 2019, 12:25 [IST]
Other articles published on Aug 3, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X