For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி பந்துவரைக்கும் போராடறதுதான் மும்பை இந்தியன்சோட பலம்... கேப்டனோட பலமும் அதுதான்!

சென்னை : மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் இரண்டில் வெற்றியும் 2ல் தோல்வியும் கண்டுள்ளது.

இந்நிலையில் அதன் பௌலர் ட்ரெண்ட் போல்ட் அணிக்கும் அதன் கேப்டனுக்கும் சிறப்பான மெசேஜை அனுப்பியுள்ளார்.

'தல' பார்முக்கு வந்தாச்சு..இனிமே எப்பவும் வாண வேடிக்கைதான். தோனியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்! 'தல' பார்முக்கு வந்தாச்சு..இனிமே எப்பவும் வாண வேடிக்கைதான். தோனியை புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்!

அணியின் மிடில் ஆர்டருக்கான தேவை உள்ள நிலையில் அதிகமான ரன்கள் அடிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

2ல் வெற்றி... 2ல் தோல்வி

2ல் வெற்றி... 2ல் தோல்வி

ஐபிஎல் 2021 தொடரின் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் அடைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த போட்டியை பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நாளை சென்னையில் விளையாடவுள்ளது.

போல்ட் பாராட்டு

போல்ட் பாராட்டு

சென்னையில் மும்பை இந்தியேன்ஸ் அணி விளையாடக்கூடிய இறுதி போட்டி இது. இந்நிலையில் மும்பை அணியின் பௌலர் ட்ரெண்ட் போல்ட் அணி மற்றும் கேப்டனுக்காக அணியின் வலைதளத்தில் வீடியோ மூலம் பேசியுள்ளார். ஒவ்வொரு போட்டியின் கடைசி பந்துவரை போராடுவதை தனது பலமாக மும்பை இந்தியன்ஸ் அணி கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக ரன்களுக்கான தேவை

அதிக ரன்களுக்கான தேவை

மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் மிடில் ஆர்டரில் அணி சொதப்பி வருகிறது. இந்நிலையில் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடுவதற்கான வேகத்துடன் இருப்பதாகவும் ஆனால் சிறப்பான துவக்கத்தை அளிக்க முடியவில்லை என்றும் தெரிவித்த ட்ரெண்ட் போல்ட், அதிகமான ரன்களை அடிக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதிக திறமை தேவை

அதிக திறமை தேவை

இந்நிலையில் அடுத்ததாக மோதவுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான போட்டி மிகவும் சிறப்பானதாக அமையும் என்றும் அதில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக ஸ்கோரை அடிக்கும் என்றும் ட்ரெண்ட் போல்ட் குறிப்பிட்டுள்ளார். பனிப்பொழிவுக்கிடையில் பந்தை கையாள்வதற்கு திறமை அதிகமாக தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரோகித் குறித்து பாராட்டு

ரோகித் குறித்து பாராட்டு

இதனிடையே கேப்டன் ரோகித் சர்மாவின் கீழ் விளையாடுவது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகவும் அவர் மிகவும் பாசிட்டிவானவர் என்றும் தெரிவித்த ட்ரெண்ட் போல்ட், அவரிடம் இருந்து அதிகமான அனுபவத்தை பெறுவதோடு அல்லாமல் எளிதாக பழக முடியும் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Thursday, April 22, 2021, 17:46 [IST]
Other articles published on Apr 22, 2021
English summary
It is definitely tricky when the ball gets wet in the dew -Boult said
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X