For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி எப்பவுமே கேப்டன் கூல் இல்லைங்க... அவர் கோவப்பட்டா முன்னால நிக்க முடியாது

டெல்லி : கேப்டன் கூல் என்று பெருமையுடன் அழைக்கப்படும் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி எப்போதுமே கூலாகவே இருக்க மாட்டார் என்றும் அவர் கோபப்படும் தருணங்களும் உண்டு என்று முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

I have seen Dhoni lose his cool: Gambhir

ஸ்டார் ஸ்போர்ட்சின் கிரிக்கெட் கனெக்டட் ஷோவிற்காக பேசிய கவுதம் கம்பீர் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் தோனி கோபப்பட்ட நிகழ்வுகளை நினைவு கூர்ந்துள்ளனர்.

தோனியும் மனிதன்தானே என்றும் அவர் கோபப்பட்டால் என்ன தவறு என்றும் கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவரா வில்லன்.. மனசெல்லாம் தங்கமா இருக்கே.. ஓடி வந்து பாராட்டிய சானியா, சாய்னாஇவரா வில்லன்.. மனசெல்லாம் தங்கமா இருக்கே.. ஓடி வந்து பாராட்டிய சானியா, சாய்னா

20 ஆண்டு கேரியர்

20 ஆண்டு கேரியர்

இந்திய அணியில் தான் இடம்பெற்றிருந்த 20 ஆண்டுகால கேரியரில் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் என பல்வேறு அவதாரங்களில் மிளிர்ந்தவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் சிறப்பான கேம் பினிஷர் என்றும் கேப்டன் கூல் என்றும் ரசிகர்களால் மட்டுமின்றி சக வீரர்களாலும் போற்றப்பட்டவர்.

தோனி குறித்து கவுதம் கம்பீர்

தோனி குறித்து கவுதம் கம்பீர்

முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகள், 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். தோனியின் கேப்டன்ஷிப்பின் கீழ் அதிகமாக விளையாடியுள்ள கவுதம் கம்பீர், தோனி தன்னுடைய அமைதியை இழந்து கோபப்பட்ட தருணங்கள் உண்டு என்ற ரகசியத்தை உடைத்துள்ளார்.

ரகசியத்தை வெளிப்படுத்திய கம்பீர்

ரகசியத்தை வெளிப்படுத்திய கம்பீர்

தன்னுடைய அமைதியை தோனி எப்போதுமே எந்த தருணத்திலுமே விட்டதில்லை என்று பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர். ஆனால் அவர் பொறுமையை இழந்து மற்றவர்களிடம் கோபப்பட்ட பல தருணங்களை தான் உடனிருந்து பார்த்திருக்கிறேன் என்று கம்பீர் கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்சின் கிரிக்கெட் கனெக்டட் ஷோவிற்காக பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். அவரும் மனிதர் தானே என்று குறிப்பிட்டுள்ள கம்பீர், அவர் கோப்பப்பட்டால் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேட்டை தூக்கி அடித்த தோனி

பேட்டை தூக்கி அடித்த தோனி

இந்திய அணி மற்றும் சிஎஸ்கேவில் தவறாக பீல்டிங் செய்யும் வீரர்கள் மற்றும் கேட்ச் தவறவிடுதல் போன்ற நேரங்களில் அவர் கடுமையான கோபத்தை வெளிப்படுத்துவார் என்றும் கம்பீர் கூறியுள்ளார். இதனிடையே தோனி கோபத்தில் பேட்டை தூக்கி எறிந்த சம்பவங்களும் உண்டு என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, May 12, 2020, 19:59 [IST]
Other articles published on May 12, 2020
English summary
MS Dhoni lost his temper during warm-up and reported late for practise -Irfan Pathan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X