For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜாம்பவான்கள் கோலி, ஸ்மித் ஆகியோரின் ரசிகன் நான்… இங்கிலாந்து ஆல் ரவுண்டரின் அசால்ட் பாராட்டு

லண்டன்:கோலி மற்றும் ஸ்மித் ஆகியோரின் ஆட்டம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று பென் ஸ்டோக்ஸ் கூறி இருக்கிறார்.

தென்னாப்பிரிக்க வம்சாவளியை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், கிரிக்கெட்டில் தற்போதைய தலைமுறையின் சிறந்த வீரர். இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டராக வலம் வருபவர்.

27 வயதான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணி நம்பர்1 அணியாக இருக்க முழு தகுதியும் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அத்துடன் உலகின் நம்பர் 1 அணியாக இருக்கும் அணி கண்டிப்பாக உலக கோப்பை அணியை வெல்லும் என்றும் கூறியுள்ளார்.

முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்! முன்னாள் கார் பந்தய வீரர் நிக்கி லௌடா மரணம்.. ஃபார்முலா 1 அரங்கில் தவிர்க்க முடியாத நபர்!

சீரான ஆட்டத்திறன்

சீரான ஆட்டத்திறன்

மேலும் அவர் கூறியதாவது:இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித் ஆகியோரது பேட்டிங் ஸ்டைல் மற்றும் சீரான ஆட்டத் திறன் மிகவும் கவர்ந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.

உலகின் முதல் அணி

உலகின் முதல் அணி

அதனால் உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு முழு பலம் உள்ளது. பொதுவாக தரவரிசையில் உலகின் நம்பர் 1 அணியாக இருக்கும் அணி உலக கோப்பையை கடந்த காலங்களில் வென்றுள்ளது. விராட் கோலி மற்றும் ஸ்மித்தின் மிகப்பெரிய ரசிகன் நான்.

பேட்டிங் திறன்

பேட்டிங் திறன்

ஸ்மித், கோலி இருவரும் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்கள். இருவருக்கும் எதிராக பந்துவீச மிகவும் தடுமாறுவார்கள். இருவரின் பேட்டிங்கை நன்கு கவனித்து வந்தால் பல பேட்டிங் நுணுக்கங்களை நாம் கற்றுக் கொள்ளலாம். இருவருமே எதிரணிக்கு கடும் நெருக்கடியை அளிப்பவர்கள். அவரவர்களின் அணிகளின் மேட்ச் வின்னர்கள் என்றார்.

உலக கோப்பை யாருக்கு?

உலக கோப்பை யாருக்கு?

சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தானிற்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து. அத்துடன் உலகின் நம்பர் 1 அணியாகவும் திகழ்கிறது. எனவே இம்முறை உலக கோப்பையை இங்கிலாந்து கைப்பற்றும் என்று பலரும் கூறி வருகின்றனர். மே 30ம் தேதியன்று லண்டன் ஓவலில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

ஒருமுறை இல்லை

ஒருமுறை இல்லை

ஆனால் கிரிக்கெட் உலகின் பழைய வரலாறுகளை புரட்டி பார்த்தால் பல உண்மைகள் தெரிய வரும். 1975ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றியது கிடையாது. ஆனால் 3 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

3 முறை தோல்வி

3 முறை தோல்வி

3 முறையும் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக 1979ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் தனது சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது.

Story first published: Tuesday, May 21, 2019, 13:17 [IST]
Other articles published on May 21, 2019
English summary
I love to watch virat kohli and steve smith palying style says ben stokes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X