For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலி, ரோகித், கேன் வில்லியம்சன்கிட்ட கத்துக்கிட்டு இருக்கேன்... என்ன இப்படி சொல்லிட்டாரு!

மும்பை : தான் ஒரு அதிரடி ஆட்டக்காரர் இல்லை என்றும் விராட், ரோகித் சர்மா மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரிடம் இதை கற்று வருவதாகவும் சத்தீஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் தங்களது ஆட்டங்களில் புதுமைகளை புகுத்தி வருவதாகவும் அதை தானும் தன்னுடைய ஆட்டத்தில் முயற்சிக்க விரும்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐபிஎல்லின் இந்த சீசனில் சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார் சத்தீஸ்வர் புஜாரா.

9ம் தேதி துவக்கம்

9ம் தேதி துவக்கம்

ஐபிஎல் 2021 தொடர் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில் தொடரின் இரண்டாவது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் சிஎஸ்கே மோதவுள்ளது. அந்த அணியில் இந்த சீசனில் இணைந்துள்ளார் சத்தீஸ்வர் புஜாரா. கடந்த 2014க்கு பிறகு இந்த சீசனில்தான் அவர் ஐபிஎல்லில் இணைந்துள்ளார்.

மகிழ்ச்சி தெரிவித்த புஜாரா

மகிழ்ச்சி தெரிவித்த புஜாரா

புஜாரா போன்ற சிறப்பான வீரரின் திறமையை வீணாக்க விரும்பவில்லை என்று ஐபிஎல் ஏலத்தின்போது சிஎஸ்கே தெரிவித்திருந்தது. இந்நிலையில் சிஎஸ்கேவில் இணைந்துள்ளது குறித்து மகழ்ச்சி தெரிவித்துள்ள புஜாரா, தன்னுடைய டெஸ்ட் திறமையை டி20 போட்டிகள் பாதிக்கும் என்று தான் கருதியதாகவும் ஆனால் தான் அதிலிருந்து வெற்றிகரமாக வெளிவந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கற்று வருவதாக வெளிப்படை

கற்று வருவதாக வெளிப்படை

மேலும் தான் டி20யில் அதிரடி பேட்ஸ்மேன் இல்லை என்றும் ஸ்டிரைக் ரேட்டிலும் தான் குறைவான புள்ளிகளுடன் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரிடம் அதை கற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

புதுமையை புகுத்த விருப்பம்

புதுமையை புகுத்த விருப்பம்

ஸ்டீவ் ஸ்மித்திடமும் இதை கற்க முடியும் என்றும் அவர்கள் தங்களது பேட்டிங்கில் புதுமைகளை புகுத்தி ஆடிவருவதாகவும் தெரிவித்துள்ளார். தானும் அதே மனநிலையில் உள்ளதாகவும் தான் வெற்றிபெற தனது பேட்டிங்கில் புதுமையை புகுத்த விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் கிரிக்கெட் குறித்த அறிவே நமது முக்கிய பலமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Story first published: Monday, April 5, 2021, 14:50 [IST]
Other articles published on Apr 5, 2021
English summary
Cricketing sense is what I feel will be your main strength -Pujara
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X