For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கையில் வலியோடு… அவர் ஆடினாரு பாருங்க.. அதுதாங்க சூப்பர் ஆட்டம்… அவரை பாராட்டும் இவர்

சண்டிகர்: கையில் ஏற்பட்ட காயத்துடனும், வலியுடனும் மயங்க் அகர்வால் ஆடியது நெகிழ்ச்சியாக இருந்தது என்று கே.எல். ராகுல் கூறினார்.

மொகாலியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கிங்ஸ் லெவன் வீழ்த்தியதில் மயங்க் அகர்வால், ராகுல் கூட்டணி முக்கியப் பங்கு வகித்தது.

கெய்லை விரைவில் அவுட்டாக்கிய சன் ரைசர்ஸ், மயங்க் அகர்வால், ராகுல் இணைந்து 114 ரன்கள் கூட்டணியை பிரிக்க மிகுந்த சிரமப்பட்டது. அந்த கூட்டணி ஒரு வழியாக பிரிந்தாலும் அணி தடுமாறவில்லை.

ஜெயிச்சுட்டோம்... ஆனாலும் அந்த தப்பை பண்ணிட்டோமே...!! எதை சொல்கிறார் இந்த ஆளப்போறான் தமிழன் ஜெயிச்சுட்டோம்... ஆனாலும் அந்த தப்பை பண்ணிட்டோமே...!! எதை சொல்கிறார் இந்த ஆளப்போறான் தமிழன்

ராகுல் திணறல்

ராகுல் திணறல்

இறுதிக்கட்டத்தில் 3 விக்கெட்டுகளை பறி கொடுத்தாலும் ராகுல், சாம் கர்ரன் வெற்றி பெறச் செய்தனர். இந்த ஆட்டத்தில் ராகுல் தொடக்கத்தில் திணற, கெய்ல் ஆட்டமிழந்த பிறகு வந்த மயங்க் அகர்வால் அழகாக ஆடி ரன்குவிப்பை தொடங்கினார்.

55 ரன்கள்

55 ரன்கள்

ராகுலை காட்டிலும் சூப்பராக ஆடிய மயங்க் அகர்வால் 43 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 55 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் ஆட்ட நாயகன் விருது பெற்ற கே.எல்.ராகுல் கூறியிருப்பதாவது:

அரைசதங்கள்

அரைசதங்கள்

முதல் 2 போட்டிகளில் எதிர்பார்த்த தொடக்கம் அமையவில்லை. நான் எடுக்கும் அரைசதங்கள் அனைத்தும் வெற்றி இலக்கை நோக்கி செல்லும் போது கிடைத்திருக்கிறது.

பாராட்டுக்குரிய ஆட்டம்

பாராட்டுக்குரிய ஆட்டம்

மயங்க் அகர்வால், விரலில் காயம்பட்டு கடும் வலியில் இருந்தார், ஆனாலும் அவர் சிறப்பான இன்னிங்ஸை ஆடியது பாராட்டுக்குரியது. சிக்சர்கள் அடிப்பது கடினம் என்று கர்ரனிடம் கூறினேன். ஆனால் அவர் சிக்ஸ் அடிக்க முயற்சித்தார். அந்த பந்துகளும் இடைவெளிகளில் சென்றது என்று கூறினார்.

Story first published: Tuesday, April 9, 2019, 12:08 [IST]
Other articles published on Apr 9, 2019
English summary
I really enjoy batting with mayank and batting group has done well so far says rahul.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X