For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

4 டவுனாக இறங்குமாறு நான்தான் "பினிஷிங் குமாருக்கு" யோசனை சொன்னேன்.. ஹர்பஜன்!

கொல்கத்தா: ஆசியா கோப்பை இறுதிப் போட்டியில் 4வதாக களம் இறங்குமாறு நான்தான் கேப்டன் டோணிக்கு ஆலோசனை சொன்னேன். அவரும் அதேபோல இறங்கினார். அசத்தினார் என்று கூறியுள்ளார் சுழற்பந்து ஜாம்பவான் ஹர்பஜன் சிங்.

டோணி வழக்கமாக இறங்காத இடம்தான் இந்த "4 டவுன்". ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் 4வது இடத்தில் இறங்கி ஆடினார். கடைசியில் அவர்தான் அட்டகாசமான சிக்ஸர் அடித்துப் போட்டியையும் சிறப்பாக முடித்து வைத்தார்.

இதற்காக டோணியை உலகமே பாராட்டி வரும் நிலையில் டோணி 4வது இடத்தில் இறங்கும் யோசனையைச் சொன்னதே நான்தான் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஜஸ்ட் லைக் தட் அதிரடி

ஜஸ்ட் லைக் தட் அதிரடி

டோணி ஆட வந்தபோது இந்தியாவிடம் 14 பந்துகள் இருந்தன. வெற்றிக்குத் தேவையான ரன்கள் 22 ஆக இருந்தது. ஆனால் டோணி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார்.

6 பந்து 20 ரன்கள்

6 பந்து 20 ரன்கள்

6 பந்துகளைச் சந்தித்த டோணி, 20 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் தனது கடைசிப் பந்தில் அவர் சிக்ஸர் விளாசினார்.

7 பந்து மிச்சம் வைத்து

7 பந்து மிச்சம் வைத்து

இதனால் 7 பந்துகளை மிச்சம் வைத்து இந்தியா அபார வெற்றி பெற்றது. 6வது முறையாக ஆசியக் கோப்பையையும் வென்றது.

ஹர்பஜன் ஐடியா

ஹர்பஜன் ஐடியா

அந்தப் போட்டியில் பாண்ட்யா இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4வது வீரராக டோணியே ஆட வந்தார். இது ஹர்பஜன் சிங் கொடுத்த ஐடியாவாம். இதை ஹர்பஜனே கூறியுள்ளார்.

நான் சொன்னேன்

நான் சொன்னேன்

என்னிடம் பாண்ட்யாவை அடுத்து அனுப்பலாமா என்று கேட்டார் டோணி. அதற்கு நான் வேண்டாம், நீங்களே போய் ஆடுங்க. நீங்கதான் உலகின் பெஸ்ட் பினிஷர். நீங்க போனாதான் சரியா இருக்கும் என்று கூறினேன்.

சின்ன மேட்டர்

சின்ன மேட்டர்

இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களை, யோசனைகளை நான் சக வீரர்களுடன் பகிர்ந்து கொள்வதுதான். அந்த வகையில் டோணியிடமும் கூறினேன். அவரும் முன்கூட்டியே ஆடச் சென்றார்.

ஜூனியர்களுக்கு என்னாலான உதவி

ஜூனியர்களுக்கு என்னாலான உதவி

எனது சீனியர்களிடமிருந்து நான் நிறையக் கற்றுள்ளேன். அது என்னை சிறந்த வீரராக மாற்ற உதவியுள்ளது. அதேபோல எனது ஜூனியர் வீரர்களுக்கும் எனது அனுபவத்தை பாஸ் செய்கிறேன், ஐடியாக்கள் கொடுக்கிறேன் என்றார் ஹர்பஜன் சிங்.

Story first published: Wednesday, March 9, 2016, 13:15 [IST]
Other articles published on Mar 9, 2016
English summary
While India's limited overs skipper Mahendra Singh Dhoni is getting all the praise for finishing off the Asia Cup final against Bangladesh in style, star off spinner Harbhajan Singh on Tuesday revealed it was his idea to send the "world's best finisher" up the order.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X