For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் சர்மா கீழ விளையாடினது தான் பெஸ்ட்... ஹர்திக் பாண்டியா உற்சாகம்

மும்பை : இந்திய அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மாவுடன் இணைந்து ஆடி வருகிறார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.

Recommended Video

Rohit Sharma கூட விளையாடியது தான் பெஸ்ட் - Hardik pandya கருத்து

இவர் மட்டுமின்றி ஜஸ்பிரீத் பும்ராவும் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடியதன்மூலமே சர்வதேச கவனத்தை பெற்று இந்திய அணியில் இடம்பிடித்தனர்.

முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஹர்திக் பாண்டியா, தன்னுடைய பிட்னசை நிரூபிக்க பிரம்ம பிரயத்தனம் செய்தநிலையில், கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இடம்பிடித்திருந்தார்.

காதல் மனைவியின் அழகான புகைப்படம்... காதல் மெசேஜ் அனுப்பிய விராட்காதல் மனைவியின் அழகான புகைப்படம்... காதல் மெசேஜ் அனுப்பிய விராட்

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பான தனது ஆட்டத்தின்மூலம் இந்திய அணியில் கவனத்திற்குரியவராக இருந்தார். முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிசிக்சை செய்ததன்மூலம் இவரது பிட்னஸ் கேள்விக்குறியானது. இதையடுத்து தன்னுடைய பிட்னசை நிரூபித்து கடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இடம்பிடித்திருந்தார். ஆனால் கொரோனாவால் அந்த தொடர் ரத்தானது.

அப்பாவாகும் ஹர்திக் பாண்டியா

அப்பாவாகும் ஹர்திக் பாண்டியா

கடந்த ஜனவரி 1ம் தேதி தன்னுடைய காதலி நடாஷா ஸ்டான்கோவிச்சுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் ஹர்திக் பாண்டியா. கடந்த வாரத்தில் தான் அப்பாவாக போகும் செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். இதையடுத்து, இருவரின் திருமணமும் அவசர அவசரமாக நடைபெற்றது. அந்த புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார் ஹர்திக் பாண்டியா.

சிறப்பான தருணங்கள்

சிறப்பான தருணங்கள்

இந்நிலையில் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த 2015 முதல் விளையாடிவரும் பாண்டியா, அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளியுள்ளார். ரோகித் சர்மாவிற்கு கீழ் விளையாடியதே தான் சிறப்பாக உணரும் தருணங்கள் என்று தெரிவித்துள்ள பாண்டியா, அவர் மிக சிறப்பான கேப்டன் என்றும் கூறியுள்ளார்.

அவரின்கீழ் விளையாடுவதை கொண்டாட்டமாக உணர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றிக் கொண்டாட்ட பகிர்வு

வெற்றிக் கொண்டாட்ட பகிர்வு

இதேபோல மும்பை இந்தியன்ஸ் அணியின் சக வீரர் ஜஸ்பிரீத் பும்ரா மிகவும் வித்தியாசமானவர் என்றும் பாண்டியா கூறியுள்ளார்.

அமைதியான அதேசமயம் மிகவும் திறமையானவர் பும்ரா என்று குறிப்பிட்டுள்ள பாண்டியா, தாங்கள் இருவரும் இணைந்து பல சமயங்களில் வெற்றியை அடைந்துள்ளதாகவும், அதை அழகாக பகிர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Story first published: Sunday, June 7, 2020, 13:17 [IST]
Other articles published on Jun 7, 2020
English summary
Fast bowler Jasprit Bumrah is a different character -Pandya
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X