For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு உலக கோப்பையில் ஆடனும் போல இருக்கு… டீம்ல எடுத்துக்குவீங்களா? ஆசைப்பட்ட அந்த ஸ்டார் வீரர்

போர்ட் ஆப் ஸ்பெயின்:உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஆட மிகவும் விரும்புவதாகவும், அதற்காக காத்திருப்பதாகவும் சுனில் நரைன் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு உலக கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் அந்த தொடரில் பங்கேற்கின்றன. ஏறக்குறைய அனைத்து நாடுகளும் தங்களது உலககோப்பையில் ஆடும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துவிட்டன.

மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம், கடந்த மாதம் உலக கோப்பைக்கு என பிரத்யேகமாக தேர்வுக்குழு நியமித்து புதிய தலைவரையும் நியமித்தது. அதே போல புதிய பயிற்சியாளரும் நியமிக்கப்பட்டது.

தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்! #KKRvsRR தினேஷ் கார்த்திக் போராட்டம் வீண்.. இளம் வீரரின் அபார ஆட்டத்தால் வென்ற ராஜஸ்தான்! #KKRvsRR

அணி அறிவிப்பு

அணி அறிவிப்பு

எதிர்பார்த்தபடியே 15 பேர் கொண்ட அணியை தேர்வுக்குழு வெளியிட்டது. அந்த பட்டியல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. மூத்த வீரர் கிறிஸ் கெயில் அணியில் இடம்பெற்றிருந்தார். அதேபோல, ஆண்ட்ரே ரசல் மற்றும் எர்வின் லெவிஸ் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இடம் இல்லை

இடம் இல்லை

ஆனால், அனைவரும் எதிர்பார்த்த பொல்லார்ட், சுனில் நரேன் ஆகிய இருவருக்கும் இடம் இல்லை. 2016ம் ஆண்டிலிருந்து அவர் அணியில் ஆடாததால் அவருக்கு இடம் கொடுக்கவில்லை என்று தேர்வு குழுவினர் விளக்கம் கூறியுள்ளனர்.

ஏமாற்றமே கிடைத்தது

ஏமாற்றமே கிடைத்தது

அனைத்து நாடுகளின் டி 20 ஓவர் தொடர்களிலும் ஆடி அசத்துவதால் இடம் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கிடைக்காமல் போனது

கிடைக்காமல் போனது

இதுகுறித்து சுனில் நரைன் கூறியதாவது: மேற்கிந்திய தீவுகள் அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடுவது எப்போதும் என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. அந்த வாய்ப்பை தற்போது எனக்கு கிடைக்கவில்லை.

சரி இல்லை

சரி இல்லை

ஆனால், ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்கள் வீச தயாராக இல்லை. டி 20 போட்டிகளில் ஆடுவது சரியாக இருக்கும். 4 ஓவர்களுக்கு என்னால் தாக்குப்பிடிக்க முடியும். எனக்கு அணியில் ஆட விருப்பம் இருந்தாலும், முழுமையாக தயார் ஆகாமல் அணியில் ஆடுவது சரியானது இல்லை என்பதால் ஆடவில்லை என்றார்.

Story first published: Friday, April 26, 2019, 10:08 [IST]
Other articles published on Apr 26, 2019
English summary
I've missed international cricket' says Sunil Narine.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X