For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸாரிங்க.. அப்ப நான் "ஸ்வீட் 16" கிடையாது.. 19 வயசுப் பையன்.. பொய் சொன்னதை ஒத்துக்கிட்ட அப்ரிடி!

Recommended Video

Afridi age | அப்ப நான் 16 கிடையாது, 19 வயசுப் பையன்! ஒத்துக்கிட்ட அப்ரிடி!

இஸ்லாமாபாத்:தமது உண்மையான வயது என்ன என்பதை ஒத்துக் கொண்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி, வயது பற்றிய சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.

1996 ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அப்ரிடி, 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1716 ரன் எடுத்துள்ளார். 398 ஒரு நாள் போட்டிகளில் 8064 ரன்கள் குவித்துள்ளார். பவுலராக மாறி 395 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 99 டி20 போட்டிகளிலும் அவர் விளையாடியுள்ளார்.

அறிமுகமான ஆண்டிலேயே நைரோபியில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார். அப்போது அவர் வயது 16 ஆண்டு 217 நாட்கள் என்று பதிவானது. ஆரம்ப நாட்களில் அவரது வயது தொடர்பான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சர்ச்சைகள் சர்வதேச கிரிக்கெட்டில் அவ்வப்பொழுது வந்து செல்லும். பிறகு மறக்கப்பட்டு விடும்.

நாங்க பிளே-ஆஃப் போகணும்னா.. ஹைதராபாத் தோற்கணும் சாமி.. பரிதாப நிலையில் சிக்கிய 3 அணிகள்!! நாங்க பிளே-ஆஃப் போகணும்னா.. ஹைதராபாத் தோற்கணும் சாமி.. பரிதாப நிலையில் சிக்கிய 3 அணிகள்!!

அப்ரிடியின் புத்தகம்

அப்ரிடியின் புத்தகம்

இந் நிலையில், மீண்டும் அப்டிரியின் வயது சர்ச்சை எழுந்துள்ளது. அதற்கான முடிவும் கிடைத்துள்ளது. அப்ரிடி, பத்திரிகையாளர் வஜஹத் கானுடன் இணைந்து, கேம் சேஞ்சர் (Game Changer) என்ற சுயசரிதை நூலை எழுதியுள்ளார். அதில் பாகிஸ்தான் அணிக்காக, 20 ஆண்டுகள் விளையாடிய அனுபவம், முன்னாள் கேப்டன்களின் செயல்பாடுகள், அணிக்குள் இருந்த சர்ச்சைகள் என பல விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறார். தமது வயது பற்றிய சர்ச்சைக்கும் அதில் அவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

பிறந்த ஆண்டு 1975

பிறந்த ஆண்டு 1975

தமது வயது பற்றிய உண்மையை அவர் அந்த சுயசரிதையில் தெரிவித்துள்ளார். 37 பந்துகளில் சதம் அடித்தபோது எனக்கு வயது 19.. 16 அல்ல. 1975ம் ஆண்டில் நான் பிறந்தேன். அதிகாரிகள் எனது வயதை தவறாக குறித்துவிட்டனர் என்ற அப்ரிடி, பிறந்த தேதி, மாதம் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது சுய விவர குறிப்பில் பிறந்த வருடம் 1980 என்றே இருக்கிறது. 2016ம் ஆண்டு பாகிஸ்தானுக்காக, கடைசியாக 20 ஓவர் போட்டியில் ஆடினார். அப்போது அவரது வயது 36 என்று தெரிவிக்கப்பட்டது.

அதிகாரிகளின் தவறு

அதிகாரிகளின் தவறு

இப்போது அவர் கூறியிருக்கும் விஷயத்தை அதனுடன் ஒப்பிட்டு பார்த்தோம் என்றால் உண்மையிலேயே அப்போது அவர் வயது 40 அல்லது 41 ஆக தான் இருந்திருக்கும். மேலும் அவர் தன் சுய சரிதையில் குழப்பமாக, ஆவணங்களின் படி எனக்கு அப்போது 19 வயது, 16 அல்ல. நான் 1975ல் பிறந்தவன். ஆனால் அதிகாரிகள் தான் எனது வயதை தவறாக பதிவிட்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

21 வயதில் அறிமுகம்

21 வயதில் அறிமுகம்

1975 என்றால் 1996ம் ஆண்டு கிரிக்கெட்டில் அவர் அறிமுகம் ஆகும்போது வயது 20, அல்லது 21 ஆகதான் இருந்திருக்க வேண்டும். அப்ரிடி குறிப்பிட்டிருப்பது போல் 19 என்று இருக்கவே முடியாது. அதில் இன்னொரு விஷயத்தை நாம் உன்னிப்பாக பார்த்தே ஆக வேண்டும். அதாவது முதல் சர்வதேச போட்டியில் ஆடுவதற்கு முன்பாக மேற்கிந்திய தீவுகளில் பாகிஸ்தானின் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் இடம் பெற்று ஆடி வந்தார்.

41 வயதில் டி 20

41 வயதில் டி 20

தற்போது ஒப்பிட்டு பார்த்தால் அவர் அண்டர் 19 அணியிலும் இடம்பெற்றிருக்கக் கூடாது. பாகிஸ்தான் பிரிமியர் லீகில் அவர் ஆடிய போது அவரது உண்மையான வயது 43 அல்லது 44ஆக தான் இருந்திருக்கும். 2010ல் அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வு அறிவித்த போதே அவருக்கு 35 வயது என்றாகிறது. மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்து கடைசியாக 2016ம் ஆண்டு டி 20யில் ஆடும்போது அவருக்கு வயது 41 ஆக இருக்க வேண்டும்.

அடுத்த கட்ட நடவடிக்கை

அடுத்த கட்ட நடவடிக்கை

வயது தொடர்பான உண்மையை அப்ரிடி கூறியிருப்பதன் மூலம் குறைந்த வயதில் செய்ததாக பதிவு செய்யப்பட்ட அவரது சாதனைகள் என்னவாகும்? அப்ரிடியின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அப்படியாக இருந்தால் என்ன மாதிரியான நடவடிக்கைகள்.... அடுத்த கட்டமாக எப்படி அந்த பிரச்னைகள் கையாளப்படும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Story first published: Friday, May 3, 2019, 12:35 [IST]
Other articles published on May 3, 2019
English summary
I was 19, not 16 on international debut says former pakistan player Afridi.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X