எனக்கு தகுதி உள்ளது.. அணியில் எடுங்கள்.. தோனிக்கு மாற்றாக நினைக்கும் இளம் மும்பை புள்ளி.. சர்ச்சை!

Shreyas Iyer : தோனிக்கு மாற்றாக நினைக்கும் இளம் மும்பை புள்ளி- வீடியோ

லண்டன்: இந்திய அணியில் தோனி ஓய்வு பெற்ற பின் அவரின் இடத்தை பிடிக்க நிறைய இளம் வீரர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி எப்போது வேண்டுமானாலும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது. பிசிசிஐ அவரின் இடத்தை எப்போது இளம் வீரரை வைத்து நிரப்பலாம் என்று திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில்தான் மேற்கு இந்திய தீவுகளில் இந்திய ஏ அணிக்காக விளையாடி வரும் மும்பையை சேர்ந்த ஷேரேயஸ் ஐயர் அதுகுறித்து பேட்டி அளித்துள்ளார். இந்திய அணியில் சேர்வது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஷேரேயஸ் ஐயர்

ஷேரேயஸ் ஐயர்

ஷேரேயஸ் ஐயர் அளித்துள்ள பேட்டியில், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய ஏ அணி சார்பாக விளையாடிக் கொண்டு இருக்கிறேன். இங்கே பிட்ச் பேட்டிங் செய்ய மிகவும் சவாலாக இருக்கிறது. அனைத்து பிட்ச்களும் இங்கே பவுலிங் செய்ய சாதகமான பிட்ச் ஆகும்.

இந்திய அணியில்

இந்திய அணியில்

இந்திய அணியில் விளையாட எனக்கு தகுதி இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் தொடர்ந்து நன்றாக ஆடி வருகிறேன். இந்திய அணிக்கான மேற்கு இந்திய தீவுகள் தொடரில் நான் விளையாடுவேன் என்று நினைக்கிறேன். தேர்வுக்குழு என்னை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என்று நம்புகிறேன், என்று ஷேரேயஸ் ஐயர் குறிப்பிட்டு இருக்கிறார்.

என்ன கேப்டன்

என்ன கேப்டன்

ஷேரேயஸ் ஐயர் தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தொடக்க வீரராகவும், கேப்டனாகவும் இருக்கிறார். இவர் தொடக்க வீரராக மட்டுமில்லாமல் மிடில் ஆர்டரிலும் இறங்கி நன்றாக ஆட கூடிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

எப்படி முடியும்

எப்படி முடியும்

தற்போது தோனிக்கு மாற்றாக களமிறங்கும் ரிஷாப் பண்ட் இந்திய அணியில் 6வது வீரராக பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 4வது இடத்தில் தோனியின் ஓய்விற்கு பின் யார் களமிறங்க போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதை பிடிக்கும் நோக்கத்தோடுதான் ஷேரேயஸ் ஐயர் அப்படி பேட்டி அளித்துள்ளார் என்று கூறுகிறார்கள்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
I will play better in team India if I get any chance says a Mumbai youth player.
Story first published: Wednesday, July 17, 2019, 11:59 [IST]
Other articles published on Jul 17, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X