For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டிங், பவுலிங் பண்ணினா ஆல்ரவுண்டரா? நான் சொல்றேன்... தோனி தான் ஆல் ரவுண்டர்.. யாருப்பா அது?

மும்பை:தோனியும் ஒரு ஆல் ரவுண்டர் தான் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியிருக்கிறார்.

உலக கோப்பை தொடருக்கான பரபரப்பு தொடங்கிவிட்டது. அணி வீரர்களை தேர்வு செய்வதில் ஒவ்வொரு அணியும் தயாராகி வருகிறது. ஆனால்... இந்திய அணி வீரர்கள் யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங், பந்துவீச்சாளர்கள் யார் என்பது கிட்டத்தட்ட முழு வடிவம் பெற்றுவிட்டது. 4ம் வரிசை வீரர், மாற்று விக்கெட் கீப்பர் என்பது தொடர்பான குழப்பங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.

இவர எப்படியாச்சும் உலக கோப்பை இந்திய அணியில் சேர்க்கணும்.. திரும்ப, திரும்ப பேசும் முன்னாள் கேப்டன் இவர எப்படியாச்சும் உலக கோப்பை இந்திய அணியில் சேர்க்கணும்.. திரும்ப, திரும்ப பேசும் முன்னாள் கேப்டன்

பாண்டியா, ஜடேஜா

பாண்டியா, ஜடேஜா

பிரதான ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா இருப்பார். விஜய் சங்கரும் அணியில் சேர்க்கப்படுவார் என்று நம்பலாம். ஜடேஜாவின் நிலைமை உறுதி செய்யப்படவில்லை.

கபில் தேவ் பதில்

கபில் தேவ் பதில்

இந்நிலையில், 4ம் வீரர் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் கபில் தேவ், தற்போதைய அணியில் அவருக்கு பிடித்த ஆல்ரவுண்டர் யார் என்று கூறியுள்ளார். அவர் கூறியுள்ள பதில் தான் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.

யார் சிறந்த ஆல்ரவுண்டர்?

யார் சிறந்த ஆல்ரவுண்டர்?

இதுகுறித்து கபில் தேவ் கூறியதாவது: நன்றாக பந்துவீசுபவர்களும், ரன்கள் அடிப்பவரும் தான் சிறந்த ஆல்ரவுண்டர்களா? அப்படி எல்லாம் ஒன்றுமில்லை.

ஆச்சர்யமான கருத்து

ஆச்சர்யமான கருத்து

அணியில் உள்ள விக்கெட் கீப்பர்கள் கூட ஆல்ரவுண்டர்கள் தான். என்னை பொறுத்தவரை தோனிதான் சிறந்த ஆல்ரவுண்டர் என்று கூறியிருக்கிறார். தோனியை பற்றி பாராட்டு, சிலாகித்து பேசியிருப்பதை மற்ற கிரிக்கெட் ஜாம்பவான்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

Story first published: Wednesday, April 3, 2019, 13:54 [IST]
Other articles published on Apr 3, 2019
English summary
I would consider wicket keepers also all rounders like dhoni says former captain kapil dev.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X