For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலிக்கு எதிரா ஆடணும்னு ஆசைப்படறேன்... இயான் போத்தம் விருப்பம்

சண்டிகர் : தான் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு எதிராக விளையாட ஆசைப்படுவதாக 80களின் ஜாம்பவானும் முன்னாள் இங்கிலாந்து ஆல்ரவுண்டருமான இயான் போத்தம் தெரிவித்துள்ளார்.

80களில் கபில்தேவ், ரிச்சர்ட் ஹாட்லி, இம்ரான் கான் போன்றவர்களுடன் விளையாடியது சிறப்பானது என்று தெரிவித்துள்ள பாதம், தங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நிலவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆன்லைன் லைவ் சாட்டில் பேசிய அவர், பாகிஸ்தானின் பிரதமராக ஆகியுள்ள இம்ரான் கான் மிகவும் தைரியமானவர் என்றும் கூறியுள்ளார்.

என்னாது ஐபிஎல்லுக்காக டி20 உலக கோப்பையை தள்ளி வைப்பீங்களா?என்னாது ஐபிஎல்லுக்காக டி20 உலக கோப்பையை தள்ளி வைப்பீங்களா?

 ஆல்-ரவுண்டர் இயான் போத்தம்

ஆல்-ரவுண்டர் இயான் போத்தம்

முன்னாள் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் இயான் போத்தம், கிரிக்கெட் வர்ணனையாளராகவும் உள்ளார். இவர் தற்போது இந்திய கேப்டன் விராட் கோலிக்கு எதிராக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். தன்னுடைய அணி வீரர்களின் நலனுக்கான நல்ல முடிவுகளை விராட்மேற்கொள்வதாகவும், அணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல சிறப்பான வீரராக உள்ளதாகவும் பாதம் மேலும் தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய பெருமை

மிகப்பெரிய பெருமை

80களின் ஆல்-ரவுண்டர்களில் முக்கியமானவர்கள் கபில்தேவ், ரிச்சர்ட் ஹாட்லி, இம்ரான்கான் மற்றும் இயான் போத்தம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இத்தகைய பௌலிங் ஹீரோக்களுடன் தான் விளையாடியது தனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று இயான் போத்தம் தெரிவித்துள்ளார். தங்களுக்குள் ஆரோக்கியமான போட்டி நிலவியதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறப்பான போட்டி

சிறப்பான போட்டி

ஒரே நேரத்தில் இவ்வாறு ஆல்-ரவுண்டர்கள் அதிகளவில் இருந்தது தங்களது காலகட்டத்தில்தான் என்றும் அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு சுற்றுப்பயணத்தின்போதும், கபில், ரிச்சர்ட் மற்றும் இம்ரானின் செயல்பாடுகளை தான் உற்று கவனிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். தங்களுக்குள் சிறப்பான போட்டி இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வேலைப்பளு அதிகம்

வேலைப்பளு அதிகம்

ஆல்-ரவுண்டர்கள் உருவாக்கப்படுவதில்லை என்றும் மரங்களில் தானாக வளர்வதில்லை என்றும் பாதம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ள பாதம், அது நமது உடலிலும் வெளிப்படும் என்று தெரிவித்துள்ளார். கபில்தேவ், சென்னை டெல்லி போன்ற வெயில் அதிகமான இடங்களிலும் அதிகளவில் பௌலிங் செய்துள்ளதாகவும், தற்போதைய வீரர்களிடம் இதை தான் காணவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்புடன் இருக்க வேண்டும்

பாதுகாப்புடன் இருக்க வேண்டும்

இம்ரானை தான் சமீபத்தில் சந்திக்கவில்லை என்றும், இந்த நான்கு பேரில் இம்ரான் மிகவும் கவர்ச்சியானவர் என்றும் பாதம் மேலும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக மாறியுள்ள இம்ரான் கான் மிகவும் தைரியமானவர் என்றும் அவர் பாதுகாப்புடன் இருக்க தான் விரும்புவதாகவும் இயான் போத்தம் கூறியுள்ளார்.

Story first published: Thursday, May 28, 2020, 15:02 [IST]
Other articles published on May 28, 2020
English summary
It was a privilege to play in that era -Botham
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X