For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இது ஓரிரு நாளில் வந்ததில்லை.... இதற்கு அவர் தான் காரணம்.... சதம் குறித்து மனம் திறந்த அஸ்வின்!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சதமடித்து அசத்திய அஸ்வின், தன் பேட்டிங் முன்னேற்றத்திற்கு காரணமானவர் குறித்து மனம் திறந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஆல்ரவுண்டர் அஸ்வினின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்தான் .

இந்நிலையில் தன் பேட்டிங் திறன் முன்னேற்றத்திற்கு காரணமான நபருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் நன்றி தெரிவித்துள்ளார்.

இவர் ஏன் டீமில் இருக்கிறார்? இரக்கமே இன்றி ஓரம்கட்டிய கோலி.. பரிதாபமாக பீல்டிங் செய்த மூத்த வீரர்! இவர் ஏன் டீமில் இருக்கிறார்? இரக்கமே இன்றி ஓரம்கட்டிய கோலி.. பரிதாபமாக பீல்டிங் செய்த மூத்த வீரர்!

அதிரடி

அதிரடி

2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதே போல் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2வது இன்னிங்சில் சதமடித்து ( 106 ) ரன்கள் எடுத்தார். குறிப்பாக ஜாக் லீச், மொயின் அலி ஆகியோரின் பந்துகளை சிறப்பாக ஸ்வீப் ஷாட்களை ஆடித்து வியக்கவைத்தார்.

முன்னேற்றம்

முன்னேற்றம்

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் அடிக்கும் 5வது சதம் இதுவாகும். இவர் கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக சதமடித்தார். மேலும் அவர் கடைசி அரை சதம் 2017ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அடித்ததாகும்.

கம் பேக்

கம் பேக்

5 ஆண்டுகளுக்கு பிறகு அஸ்வின் பேட்டிங்கில் மீண்டும் ஃபார்ம் ஆகி வருகிறார். ஆஸ்திரேலிய தொடரில் அவர் பெரிய அளவில் ரன் அடிக்கவில்லை என்றாலும், நாதன் லைன் பந்துவீச்சை சிறப்பாக கையாண்டது அனைவரையும் வியக்கவைத்தது. ஏனெனில் அவரை விட அணியில் யாரும் அப்போது நாதன் லைனிடம் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

விளக்கம்

விளக்கம்

சதம் குறித்து பேசியுள்ள அஸ்வின், இந்த பேட்டிங் முன்னேற்றம் திடீரென வந்தது என நான் கூறிவிட மாட்டேன். எனது பேட்டிங்கிற்கு காரணம் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தான். அவருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். கடைசியாக நான் சிறந்த ஸ்வீப் ஷாட் ஆடியது 19 வயதில் தான். அதன் பிறகு தற்போதுதான் அதை சிறப்பாக ஆடியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, February 16, 2021, 23:38 [IST]
Other articles published on Feb 16, 2021
English summary
Ravichandran Aswin Says would love to credit rathore after hitting a Century
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X