For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியாவின் 3 பேர்... இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்கள்... எப்படை வெல்லும் -இயான் சாப்பல்

சிட்னி : இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளனர்.

இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத்தில் ஹர்திக் பாண்டியா தேர்ந்தெடுக்கப்பட்டால் மிக சிறப்பான வகையில் இந்தியாவின் பௌலிங்கில் செயல்படுவார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் சாப்பல் தெரிவித்துள்ளார்.

முதுகில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையை அடுத்து கடந்த 2018 முதல் இந்திய அணிக்காக விளையாடாமல் உள்ள ஹர்திக் பாண்டியா, தற்போதைய சூழலில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது சவாலானது என்று தெரிவித்திருந்தார்.

என்னங்க சொல்றீங்க.. கோலி போட்டுள்ள வாட்ச்சின் விலை இவ்வளவா.. ?!என்னங்க சொல்றீங்க.. கோலி போட்டுள்ள வாட்ச்சின் விலை இவ்வளவா.. ?!

டெஸ்ட் போட்டி சவாலானது

டெஸ்ட் போட்டி சவாலானது

இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டங்களை அளித்து நம்பிக்கை அளித்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, முதுகு வலி காரணமாக கடந்த 2018 முதல் இந்திய அணியில் இடம்பெறாமல் உள்ளார். இதனிடையே கடந்த ஆண்டில் அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது பிட்னஸ் கேள்விக்குறியானது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான கடந்த தொடரில் பாண்டியா இடம்பெற்றிருந்தார்.

ஆண்டு இறுதியில் திட்டம்

ஆண்டு இறுதியில் திட்டம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் எந்த தொடரும் திட்டமிடப்படாமல் இருந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் துவங்கும் இந்த தொடர் ஜனவரி மாதம் வரையில் திட்டமிடப்பட்டுள்ளது.

பௌலிங் வலிமை கூடும்

பௌலிங் வலிமை கூடும்

இந்நிலையில் இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா இணைக்கப்பட்டால், இந்தியாவின் பௌலிங் வலிமை கூடும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் சாப்பல் தெரிவித்துள்ளார். அணியில் இடம்பெறும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இதன்மூலம் நெருக்கடி இல்லாமல் விளையாட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வெற்றிக்கு வழி

இந்தியாவின் வெற்றிக்கு வழி

70 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போதைய இந்த தொடர் கவனத்தை பெற்றுள்ளது. இந்த தொடரில் ஸ்மித், வார்னர் மற்றும் லாபுசாக்னே ஆகியோர் ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த பலம் என்றும் அவர்களை வெளியேற்றுவதன்மூலம் இந்தியா வெற்றியை சுவைக்க முடியும் என்றும் சாப்பல் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழி

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழி

இதேபோல கடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வெற்றிக்கு பெரிதும் உதவிய விராட் கோலி மற்றும் சத்தீஸ்வர் புஜாராவை ஆரம்பத்திலேயே ஓரங்கட்டுவது ஆஸ்திரேலிய அணிக்கு மிகவும் முக்கியமானது என்றும் சாப்பல் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இந்திய அணியின் அதிகப்படியான ஸ்கோரை தவிர்த்து வெற்றியை பெற முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Sunday, June 7, 2020, 19:41 [IST]
Other articles published on Jun 7, 2020
English summary
Ian Chappell said it would help India if Hardik Pandya was available
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X