For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“2021-ன் சிறந்த டெஸ்ட் வீரர் விருது”.. தமிழக வீரர் இடம்பிடித்து அசத்தல்.. வியப்பில் அண்டை நாடுகள்!

துபாய்: 2021ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் என்ற விருதிற்காக 4 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழக வீரரும் இடம்பெற்று அசத்தியுள்ளார்.

Recommended Video

Ashwin in contention for ICC Men's Test Player Award 2021 | OneIndia Tamil

ஒவ்வொரு அண்டின் இறுதியிலும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து ஐசிசி விருது வழங்கி கவுரவிக்கிறது.

IND vs SA: “நோட் பன்னிக்கோங்க.. அந்த 6 பேர் கெத்து காட்டுவாங்க”.. இர்ஃபான் பதான் நம்பிக்கை! IND vs SA: “நோட் பன்னிக்கோங்க.. அந்த 6 பேர் கெத்து காட்டுவாங்க”.. இர்ஃபான் பதான் நம்பிக்கை!

அதன்படி இந்தாண்டுக்கான விருதிற்கு 4 வீரர்களை முதன்மை தேர்வாக ஐசிசி வைத்துள்ளது. இதில் இருந்து ஒருவருக்கு விருது வழங்கப்படவுள்ளது.

சிறந்த விருது

சிறந்த விருது

இந்தாண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் காரணமாக பல்வேறு டெஸ்ட் தொடர்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகள் அதிகப்படியான டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்றனர். இவற்றில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், நியூசிலாந்தின் கெயில் ஜேமிசன், இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இலங்கையின் திமுத் கர்ணரத்னே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனான ஜோ ரூட், சமீபத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் சறுக்கினார். எனினும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தாண்டு அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் அவர் தான் முதலிடத்திலுள்ளார். இதுவரை 15 டெஸ்ட்களில் விளையாடியுள்ள அவர் மொத்தம் 1,708 ரன்களை விளாசியுள்ளார். இதில் 6 சதங்களும் அடங்கும்.

நியூசிலாந்தின் வேகம்

நியூசிலாந்தின் வேகம்

நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் கெயில் ஜேமிசன் 2021ம் ஆண்டில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். சராசரியாக ஒரு போட்டிக்கு 17.51 ரன்கள் வீதம் மொத்தமாக வெறும் 105 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் கூட விக்கெட் மழை பொழிந்திருந்தார்.

இந்திய ஸ்பின்னர்

இந்திய ஸ்பின்னர்

இதற்கு அடுத்தபடியாக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறந்த வீரர் என்ற விருதை பெற காத்துள்ளார். இந்தாண்டில் இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 52 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தியுள்ளார். மேலும் சதம் ஒன்றையும் அவர் அடித்துள்ளார்.

4வது வீரர்

4வது வீரர்

இவருக்கு அடுத்தபடியாக இலங்கை அணி வீரர் திமுத் கருணரத்னே தேர்வாகியுள்ளார். 2021ல் இதுவரை 7 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர் மொத்தமாக 902 ரன்களை குவித்துள்ளார். இதில் 4 சதங்களும் அடங்கும். அவரின் தற்போதைய சராசரி 69.38 ஆகும். இந்த 4 வீரர்களில் யாருக்கு விருது சென்றடைய போகிறது என்ற அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

Story first published: Tuesday, December 28, 2021, 19:13 [IST]
Other articles published on Dec 28, 2021
English summary
Ravichandran Ashwin and 3 others nominated for the best Test Player of the Year Award
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X