For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பல் பிடுங்கிய பாம்பு.. இந்தியாவின் டெஸ்ட் வெற்றியால் சிக்கலில் ஐசிசி.. எல்லா பக்கமும் வசமான செக்!

சென்னை: இங்கிலாந்து இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின் அகமதாபாத் பிட்ச் கடும் விவாத பொருளாக மாறியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை இந்தியா வெற்றிபெறுவதற்கு ஸ்பின் பவுலர்கள் முக்கிய காரணம் ஆகும்.

அதிகாரபூர்வ புகார் அளிக்க முடிவு.. சாட்டையை சுழற்றும் இங்கிலாந்து.. தீவிரமடையும் அகமதாபாத் சர்ச்சை அதிகாரபூர்வ புகார் அளிக்க முடிவு.. சாட்டையை சுழற்றும் இங்கிலாந்து.. தீவிரமடையும் அகமதாபாத் சர்ச்சை

அக்சர் பட்டேல், அஸ்வின் ஆகியோர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து இங்கிலாந்து அணியை வீழ்த்தினார்கள். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து அக்சர் பட்டேல் 11 விக்கெட், அஸ்வின் 7 விக்கெட் எடுத்தனர்.

 இந்தியா

இந்தியா

இங்கிலாந்து இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின் அகமதாபாத் பிட்ச் கடும் விவாத பொருளாக மாறியுள்ளது. இந்த பிட்ச் மிகவும் மோசமாக இருந்ததாக இங்கிலாந்து அணி கூறியள்ளது. இது தொடர்பாக இங்கிலாந்து அணி ஐசிசியிடம் புகார் அளிக்கவும் உள்ளது.

 பிசிசிஐ

பிசிசிஐ

இந்த நிலையில் பிசிசிஐ வேண்டும் என்றே இப்படி பிட்ச்களை உருவாக்குகிறது. இதற்கு ஐசிசி உடந்தையாக உள்ளது. ஐசிசி இந்தியாவை தட்டிக்கேட்பதில்லை என்று இங்கிலாந்து அணியினர், முன்னாள் வீரர்கள் புகார் அளிக்க தொடங்கி உள்ளனர்.

முன்னாள் வீரர்

முன்னாள் வீரர்

இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கல் வாகன் அளித்த பேட்டியில், இந்திய அணி ஸ்பின் பிட்சில் நன்றாக ஆட கூடிய அணிதான். ஆனால் இந்தியா போன்ற வலிமையான அணி இப்படி மோசமாக பிட்சை உருவாக்கிவிட்டு அதில் இருந்து தப்ப நினைக்க கூடாது.

ஐசிசி

ஐசிசி

ஐசிசி பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல செயல்படுகிறது. இதை எல்லாம் அனுமதிக்க கூடாது. இந்தியா தங்களுக்கு விருப்பப்பட்ட பிட்சை உருவாக்குகிறது. இதை எல்லாம் ஐசிசி வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்

இந்தியாவின் செயலால் டெஸ்ட் கிரிக்கெட்தான் பாதிக்கப்படுகிறது. ஐசிசி இதை தட்டிக்கேட்கவில்லை என்றால் இந்தியா இதேபோன்ற பிட்சை உருவாக்கும். இதேபோன்ற தவறுகளை செய்துவிட்டு இந்தியா தப்பிக்க முயற்சி செய்யும். இதை ஏற்றுக்கொள்ள கூடாது என்று, மைக்கல் வாகன் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Saturday, February 27, 2021, 17:08 [IST]
Other articles published on Feb 27, 2021
English summary
ICC acts like a toothless snake against BCCI says England legends on Ahmedabad pitch issue.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X