For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 கிரிக்கெட்டில் இனி புதிய விதிகள்.. இம்மாதம் முதல் அமல்.. இனி பவர்ப்ளேவில் கலக்கல் தான்!

துபாய்: சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டை மேலும் விறுவிறுப்பாக மாற்ற ஐ.சி.சி. பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சில விதிகள், ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும், சில விதிகள் ரசிகர்களை கடுப்பேற்றும்.

ஆனால், ஐ.சி.சி. அறிவித்துள்ள இந்த விதிகள் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். ஆனால் பந்துவீச்சாளர்கள் தான் பாவம்.

சூப்பர் முடிவு

சூப்பர் முடிவு

ஸ்லோ ஓவர் ரேட் என்று அழைக்கப்படும், குறித்த நேரத்திற்குள் ஓவர்கள் வீசாமல் இருப்பது தற்போது கிரிக்கெட்டில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பந்துவீசும் அணி ஃபில்டர்களை நிறுத்த அதிக நேரம் எடுத்து கொள்வது, ஆட்டத்தின் வேகத்தை குறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை சரி செய்ய ஐ.சி.சி. ஒரு சூப்பர் முடிவை எடுத்துள்ளது.

பெனால்டி விதி

பெனால்டி விதி

அதாவது,ஐ.சி.சி. விதிப்படி ஒன்றரை மணி நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி இருக்க வேண்டும். ஆனால் பந்துவீசும் அணி 18 ஓவர் மட்டுமே ஓன்றரை மணி நேரத்தில் வீசி இருக்கிறது என்று வைத்து கொள்வோம், எஞ்சிய ஓவர்களில் பவுண்டரி லைனில் நிற்கும் 5 Fielder களில் ஒருவர் குறைக்கப்பட்டு, 30 yard உள்வட்டத்துக்குள் சேர்க்கப்படுவார் என்பதே புதிய விதி.. இந்த பெனால்டி மூலம் பேட்டிங் செய்யும் அணி பவுண்டரிகளை விளாசி ரன் குவிக்க ஏதுவாக இருக்கும்.

Recommended Video

Rahul Dravid opines on Rishabh Pant's shot selection, says management will have a chat
ரன்குவிக்க வாய்ப்பு

ரன்குவிக்க வாய்ப்பு

இந்த பெனால்டியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட நேரத்திற்குள் 20வது ஓவரின் முதல் பந்தை வீசி இருக்க வேண்டும். இல்லையேனில் பவுண்டரி லைனில் உள்ள ஒரு வீரர், குறைக்கப்படுவார். ஐ.சி.சி.யின் இந்த விதி, இனி டி20 கிரிக்கெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், இதனால் பெனால்டி பெற கூடாது என்பதற்காக இனி ஓவர்களை வீச பந்துவீச்சாளர்களும், கேப்டன்களும் அதிக நேரம் எடுத்து கொள்ள மாட்டார்கள்

ஐ.பி.எல். பாணியில் ஓய்வு

ஐ.பி.எல். பாணியில் ஓய்வு

இந்த விதி ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்ற The Hundreds தொடரில் வெற்றிக்கரமாக நடைமுறைபடுத்தப்பட்டது. இதே போன்று ஒவ்வொரு இன்னிங்சிலும் 10 ஓவர்களுக்கு இடையில் 2 நிமிடம் 30 விநாடிகள் வீரர்கள் தண்ணீர் குடிப்பதற்காக வழங்கப்படும். இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தலாமா வேண்டாமா என்று ஒவ்வொரு தொடர் தொடங்குவதற்கு முன்பு அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் முடிவு எடுத்து கொள்ளலாம். இந்த விதிகள் அனைத்தும் வரும் 16ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளும், அயர்லாந்தும் மோதும் டி20 போட்டி முதல் அமலுக்கு வருகிறது.

Story first published: Friday, January 7, 2022, 13:45 [IST]
Other articles published on Jan 7, 2022
English summary
ICC Announced New Rules for T20 International game Explained. வருகிறது சர்வதேச டி-20 போட்டிகளில் புதிய விதிகள்.. !! இம்மாதம் முதல் அமல்.. இனி கலக்கல் தான்..!!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X