For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2021 ஆண்டிற்கான ஐ.சி.சி. சிறந்த டெஸ்ட் அணி..!! 3 இந்திய வீரர்களுக்கு இடம்

துபாய்:, ஐ.சி.சி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வெலன் அணியை தேர்வு செய்துள்ளது.

நடப்பாண்டில் டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கியவர்களை ஆண்டு தோறும் ஐ.சி.சி. தேர்வு செய்வது வழக்கம்.

6 இந்திய வீரர்களுக்கு கொரோனா..!! சிக்கலை தாண்டி சாதனை படைத்த U-19 இந்திய அணி..!! 6 இந்திய வீரர்களுக்கு கொரோனா..!! சிக்கலை தாண்டி சாதனை படைத்த U-19 இந்திய அணி..!!

2021 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி. தேர்வு செய்துள்ள அணியில், ஒரு ஆஸ்திரேலிய வீரர் மட்டுமே உள்ளார். அதிகபட்சமாக 3 இந்திய வீரர்களும், 3 பாகிஸ்தான் வீரர்களும் உள்ளனர்

முன்வரிசை வீரர்கள்

முன்வரிசை வீரர்கள்

தொடக்க வீரராக ரோகித் சர்மா தேர்வாகியுள்ளார். நடப்பாண்டில் 11 போட்டியில் விளையாடி ரோகித் 906 ரன்களை குவித்துள்ளார்.இதில் 2 சதம் 4 அரைசதம் அடங்கும். மற்றொரு தொடக்க வீரராக இலங்கை அணியின் கருணரத்னே இடம்பெற்றுள்ளார். அவர் நடப்பாண்டில் 902 ரன்களை சேர்த்துள்ளார். இந்த அணியில் ஒரே ஒரு ஆஸ்திரேலிய வீரராக லாபஸ்சேங் இடம்பெற்றுள்ளார். அவர் 5 போட்டிகளில் விளையாடி 526 ரன்களை தேர்வு செய்துள்ளார்

நடுவரிசை வீரர்கள்

நடுவரிசை வீரர்கள்

நடப்பாண்டில் அதிக டெஸ்ட் ரன்களை குவித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் 4வது வீரராக தேர்வாகியுள்ளார். அவர் நடப்பாண்டில் 1708 ரன்கள் அடித்துள்ளார்.நடுவரிசையில் 5வது வீரராகவும் அணியின் கேப்டனாகவும் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 6வது வீரராக பாகிஸ்தான் அணியின் ஃபாவத் ஆலம் தேர்வாகியுள்ளார்.9 போட்டிகளில் களமிறங்கி 571 ரன்களை அவர் அடித்துள்ளார். 7வது வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் தேர்வாகியுள்ளார். 12 போட்டியில் விளையாடி 748 ரன்களை அவர் விளாசியுள்ளார்

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

8வது வீரராக ஆல்ரவுண்டரான தமிழக வீரர் அஸ்வின் தேர்வாகியுள்ளார். அஸ்வின் நடப்பாண்டில் 54 விக்கெட்டும், 355 ரன்களையும் குவித்துள்ளார்.9வது வீரராக நியூசிலாந்தை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் கெயில் ஜெமிசன் இடம்பெற்றுள்ளார். அவர் 5 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 10வது வீரராக பாகிஸ்தான் அணியின் ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டில் 41 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

3 பாக்.வீரர்கள்

3 பாக்.வீரர்கள்

11வது வீரராக பாகிஸ்தானை சேர்ந்த ஷாகின் அஃபிரிடி 47 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். நடப்பாண்டில் ஆஸ்திரேலிய அணி மிக குறைந்த அளவிலேயே டெஸ்ட் போட்டி விளையாடியது. இதனால் பெரும்பாலான அந்த நாட்டு வீரர்கள் இடம்பெறவில்லை சிறந்த டெஸ்ட் அணி ரோகித், கருணரத்னே, லாபஸ்சேங், ஜோ ரூட், வில்லியம்சன், ஃபாவத் அலம், ரிஷப் பண்ட்,அஸ்வின், ஜேமிசன், ஹசன் அலி, ஷாகின் அஃபிரிடி

Story first published: Thursday, January 20, 2022, 18:58 [IST]
Other articles published on Jan 20, 2022
English summary
2021 3 Indians in Test Team of the Year 2021 selected by ICC 2021 ஆண்டிற்கான ஐ.சி.சி. சிறந்த டெஸ்ட் அணி..!! 3 இந்திய வீரர்களுக்கு இடம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X