For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அயர்லாந்து வீரர்கள் ஓகே.. ஆனா இந்தியா வேணாம்” ஐசிசி-யால் இந்திய அணிக்கு தொடரும் அவமானம் - விவரம்!

சென்னை: டி20 கிரிக்கெட்டை தொடர்ந்து ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் பட்டியலிலும் இந்தியாவுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் ப்ளேயிங் 11 அணியை ஐசிசி தேர்வு செய்து அறிவித்துள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த டி20 அணியில் இந்திய வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.

“எங்கையா இருந்த நீ”.. ஷர்துல் தாக்கூரின் விடாப்பிடி போராட்டம்.. முதல் ஒருநாள் போட்டியின் முடிவு!! “எங்கையா இருந்த நீ”.. ஷர்துல் தாக்கூரின் விடாப்பிடி போராட்டம்.. முதல் ஒருநாள் போட்டியின் முடிவு!!

ஏமாந்த ரசிகர்கள்

ஏமாந்த ரசிகர்கள்

பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர்கள், பவுலர்கள் என ஒரு பிரிவில் கூட இந்திய வீரர்களின் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் பாகிஸ்தான் அணியை சேர்ந்த முகமது ரிஸ்வான், பாபர் அசாம், சாஹீன் அஃப்ரிடி ஆகிய 3 வீரர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது. குறிப்பாக பாபர் அசாம் தான் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

ஐசிசி ஒருநாள் அணி

ஐசிசி ஒருநாள் அணி

இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்த நிலையில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியையும் ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி 2021ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் ஓப்பனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 14 போட்டிகளில் 705 ரன்களை குவித்துள்ளார். இவருடன் தென்னாப்பிரிக்க வீரர் ஜென்னி மாலன் மற்றொரு ஓப்பனராக இடம்பிடித்துள்ளார்.

பாபர் அசாம் கேப்டன்

பாபர் அசாம் கேப்டன்

பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 அணிக்கும் இவர் தான் கேப்டனாக இடம்பெற்றுள்ளார். மிடில் ஆர்டரில் மற்றொரு பாகிஸ்தான் வீரர் ஃபகார் சமான் மற்றும் தென்னாப்பிரிக்காவின் வான் டர் டுசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் ஃபினிஷராக வங்கதேச வீரர் முஸ்பிகுர் ரஹீம் இடம்பிடித்துள்ளார்.

பந்துவீச்சு படை

பந்துவீச்சு படை

பந்துவீச்சு படையில் வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன், முஷ்டவிசூர் ரஹ்மான் இடம்பிடித்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து இலங்கையின் வானிண்டு ஹசரங்கா துஷ்மந்தா சமீரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடைசியாக அயர்லாந்தை சேர்ந்த சிமி சிங் இடம்பிடித்துள்ளார்.

இந்திய வீரர்களுக்கு இடமில்லை

இந்திய வீரர்களுக்கு இடமில்லை

ஒருநாள் அணியிலும் இந்திய வீரர்கள் ஒருவருக்கு கூட இடம் கிடைக்கவில்லை. கடந்த 2021ம் ஆண்டில் இந்திய அணி அதிகப்படியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடியதால் தான் அவர்களின் பெயர்கள் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இல்லை எனக் கூறப்படுகிறது. எனினும் சிறிய அணிகளின் வீரர்களே இடம்பிடித்த நிலையில் ஒரு இந்திய வீரர் கூடவா இடம்பிடிக்கவில்லை என அதிருப்தியில் உள்ளனர்.

Story first published: Thursday, January 20, 2022, 18:56 [IST]
Other articles published on Jan 20, 2022
English summary
After the t20 team, ICC announced the Men’s ODI team of the 2021 year, no indian player is included
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X