For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Hall Of Fame விருதுகள் அறிவிப்பு.. இந்திய வீரருக்கு கவுரவம்.. சங்ககாரா, ஆண்டி ப்ளவருக்கும் அறிவிப்பு

மும்பை: இந்தியாவை சேர்ந்த வினோ மேன்கட், இலங்கையின் குமார் சங்ககாரா மற்றும் ஜிம்பாவேவின் ஆண்டி ப்ளவர் ஆகியோருக்கு ஹால் ஆஃப் பேம் எனும் விருதை அறிவித்து ஐசிசி கவுரவப்படுத்தியுள்ளது.

முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ம் தேதி தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு இந்தாண்டுக்கான ஆல் ஆஃப் ஃபேம் விருதுகளை அறிவித்துள்ளது ஐசிசி அமைப்பு.

 ஆல் ஆஃப் பேம் விருது

ஆல் ஆஃப் பேம் விருது

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரியும் வீரர்களைக் கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் 'ஹால் ஆஃப் ஃபேம்' விருதுகளை வழங்கிவருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான விருதை 10 வீரர்களுக்கு வழங்கியது. அதில் இந்திய வீரர் வினோ மேன்கட்-க்கும் அறிவித்து கவுரவப்படுத்தியுள்ளது.

ஐசிசி விதிமுறைகள்

ஐசிசி விதிமுறைகள்

'ஹால் ஆஃப் ஃபேம்' என்ற அந்தஸ்த்தை பெற பேட்ஸ்மேனாக இருந்தால் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 8000 ரன்கள் மற்றும் 20 சதங்கள் அடித்திருக்கவேண்டும். அதேபோல பந்துவீச்சாளராக இருந்தால் அவர் ஒருநாள் அல்லது டெஸ்ட் போட்டியில் குறைந்தது 200 விக்கெட்டுகள் எடுத்திருக்கவேண்டும். இந்த விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியாக இருந்தால் 30 ஸ்டைரிக் ரேட்டுனும் டெஸ்ட் போட்டியாக இருந்தால் 50 ஸ்டிரைக் ரேட்டுனும் இருக்க வேண்டும். முக்கியமாக இந்தப் பட்டியலுக்கு இடம்பெற வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகள் முடிந்திருக்கவேண்டும்.

அனுபவம்

அனுபவம்

இந்த விதிமுறைகளின்படிதான் வினோ மேன்கட்டிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1946ம் ஆண்டு முதல் 1956ம் ஆண்டு வரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிய வினோ மேன்கட் 44 போட்டிகளில் 2,109 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 அரைசதங்களும், 5 சதங்களும் அடங்கும். இவரின் அதிகபட்ச ஸ்கோர் 231 ரன்களாகும்.

இந்தியாவின் 7வது வீரர்

இந்தியாவின் 7வது வீரர்

இந்தியா சார்பில் 7வது வீரராக வினோ மேன்கட் இந்தப் பட்டியலில் தற்போது இடம்பெற்றுள்ளார். இவருக்கு முன்பு இந்தியா சார்பில் பிஷன் சிங் பேடி(2009), சுனில் காவஸ்கர்(2009), கபில் தேவ்(2009), அனில் கும்ப்ளே(2015), ராகுல் திராவிட்(2018), சச்சின் டெண்டுல்கர் ( 2019) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

 சங்ககாரா

சங்ககாரா

இதே போல ஜிம்பாவே அணியின் ஜாம்பவான் ஆண்டி ஃபிளவர் மற்றும் இலங்கையை சேர்ந்த குமார் சங்ககாரா ஆகியோருக்கும் ஹால் ஆஃப் ஃபேம் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சங்ககாரா 12,400 ரன்களை விளாசியுள்ளார். இதில் 38 சதம், 11 இரட்டை சதம், 52 அரை சதமும் அடங்கும். இதே 404 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 14,234 ரன்களை குவித்துள்ளார். இதில் 25 சதமும், 93 அரைசதமும் அடங்கும்.

Story first published: Sunday, June 13, 2021, 22:10 [IST]
Other articles published on Jun 13, 2021
English summary
Vinoo Mankad, Kumar Sangakkara, Andy Flower Among ICC's Hall of Fame Special Inductees
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X