For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருமே எதிர்பார்க்காத முடிவை எடுத்த பாக்.. ஐசிசி தலைவர் பதவியில் கங்குலி.. செம திட்டம்.. பரபர தகவல்!

மும்பை : ஐசிசி தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதை அடுத்து பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி, ஐசிசி தலைவர் ஆகும் வாய்ப்பு எளிதாகி உள்ளது.

ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்படவும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

டி20 உலக கோப்பை இந்த ஆண்டு கண்டிப்பா நடக்காது... சாத்தியமே இல்லை... ஈசான் மணி

பிசிசிஐ தலைவர் கங்குலி

பிசிசிஐ தலைவர் கங்குலி

கங்குலி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார். அப்போது அவர் தேர்தலில் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அப்போது முதல் பிசிசிஐ சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பகல் - இரவு டெஸ்ட் உள்ளிட்ட பல அதிரடி முடிவுகளை எடுத்து அசத்தி இருந்தார் கங்குலி.

ஐசிசி தேர்தல்

ஐசிசி தேர்தல்

தற்போது ஐசிசி தலைவர் பதவி விரைவில் காலியாக உள்ளது. அந்த பதவியில் தற்போது முன்னாள் பிசிசிஐ தலைவர் ஷஷான்க் மனோகர் இருக்கிறார். அடுத்ததாக அந்த பதவிக்கு யார் போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பிசிசிஐ-க்கு சிக்கல்

பிசிசிஐ-க்கு சிக்கல்

ஷஷான்க் மனோகருக்கும், தற்போது உள்ள பிசிசிஐ லாபிக்கும் ஏற்கனவே பல மோதல்கள் உள்ளன. அதன் காரணமாக, பிசிசிஐக்கு பல்வேறு சிக்கல்களை ஐசிசி ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் பிசிசிஐக்கு சாதகமான முடிவுகளை எடுக்க தங்களுக்கு சாதகமான நபர் ஐசிசி தலைவராக இருக்க வேண்டும் என பிசிசிஐ லாபி திட்டமிட்டு வருகிறது.

கங்குலி மூலம் தீர்வு

கங்குலி மூலம் தீர்வு

அதே சமயம், பிசிசிஐ முன் மொழியும் நபர் மற்ற கிரிக்கெட் அணிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இந்த நிலையில் தான் பிசிசிஐ தலைவர் கங்குலி ஐசிசியில், பிசிசிஐ சார்பில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதன் மூலம், ஐசிசி தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற நாடுகள் ஆதரவு

மற்ற நாடுகள் ஆதரவு

முன்னாள் இந்திய அணி கேப்டனாக இருந்த கங்குலியை ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்தால் அவரை அனைத்து நாடுகளும் ஆதரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும், அவர் பிசிசிஐ தலைவராக குறுகிய காலத்தில் பெயர் சொல்லும் அளவுக்கு செயல்பட்டு இருக்கிறார்.

பாக். சிக்கல்

பாக். சிக்கல்

அதே சமயம், இந்தியாவுக்கு போட்டியாக இருந்தது பாகிஸ்தான். முன்னாள் ஐசிசி தலைவராக இருந்தவர் எஹ்சான் மானி. அவர் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவராக இருக்கிறார். அவர் மீண்டும் ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக முதலில் கூறப்பட்டது.

விலகல் முடிவு

விலகல் முடிவு

இந்த நிலையில் தான் எஹ்சான் மானி தான் ஐசிசி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். இது பிசிசிஐக்கு சாதகமான முடிவாக பார்க்கப்படுகிறது. கங்குலி போட்டியிடப் போவதாக தகவல்கள் வரும் நிலையிலும் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி தலைவர் ஆகும் கங்குலி

ஐசிசி தலைவர் ஆகும் கங்குலி

பாகிஸ்தான் விலகலை அடுத்து, கங்குலி போட்டி இன்றி ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்வாக வாய்ப்பு உள்ளது. முக்கிய நாடுகள் மட்டுமின்றி, உறுப்பினர் அல்லாத சிறிய நாடுகளும் கூட கங்குலி தலைவர் ஆவதையே விரும்பும்.

Story first published: Thursday, June 18, 2020, 14:55 [IST]
Other articles published on Jun 18, 2020
English summary
ICC Chairman race : Pakistan not intrested, Ganguly can get elected unopposed
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X