For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மீண்டும் அத்துமீறிய வங்கதேச கிரிக்கெட் ரசிகர்கள்... இந்திய தேசிய கொடிக்கு அவமரியாதை!

By Veera Kumar

லண்டன்: சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா-வங்கதேசம் நாளை மோத உள்ள நிலையில், இந்திய தேசிய கொடியை வங்கதேச ரசிகர்கள் அவமதித்துள்ளனர்.

2015ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில், வங்கதேசத்தை இந்தியா எளிதாக தோற்கடித்தது. ஆனால் அப்போட்டியில் ரோகித் ஷர்மா ஃபுல்டாஸ் பந்தில் கேட்ச் கொடுக்க அதை நடுவர் நோ-பால் என அறிவித்தார்.

இடுப்பு அளவை விட உயரம் குறைவாகவே அந்த பந்து வீசப்பட்டதாகவும், உயரமாக வீசியதாக நடுவர் நோ-பால் கொடுத்ததாகவும் வங்கதேச ரசிகர்கள் பெரும் சர்ச்சையை கிளப்பினர். ஐசிசி இந்திய கட்டுப்பாட்டில் இருப்பதாக குற்றம்சாட்டினர்.

வெறியில் ரசிகர்கள்

வெறியில் ரசிகர்கள்

இந்த நிகழ்வுக்கு பிறகு வெறிகொண்டு அலைகிறார்கள் வங்கதேச ரசிகர்கள். வங்கதேசத்தில் இந்தியா சுற்றுப் பயணம் செய்தபோது, டோணி தலைமையை வெட்டி வங்கதேச பவுலர் கையில் வைத்ததை போல போட்டோஷாப் செய்து அதை பரப்பி அதிர்ச்சியளித்தனர். மேலும், டோணி, கோஹ்லி உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு பாதி தலையை ஷேவ் செய்து அசிங்கப்படுத்தி போட்டோஷாப் வெளியிட்டனர்.

வங்கதேசம் போட்டி

வங்கதேசம் போட்டி

இந்த போட்டோக்கள் அனைத்தும் வைரலாகின. இந்தியா-பாகிஸ்தான் போட்டியைவிட இந்தியா-வங்கதேசம் போட்டித்தான் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்துவதாக அமைந்துவிட்டது.

நாயை துரத்தும் புலி

நாயை துரத்தும் புலி

இந்த நிலையில், நாய் ஒன்றை புலி துரத்துவது போல ஒரு படத்தை போட்டோஷாப் செய்துள்ள வங்கதேச ரசிகர்கள் அதை வைரலாக்கியுள்ளனர். புலியை வங்தேசம் என உவமைப்படுத்திக்கொள்கிறார்கள் அந்த நாட்டு ரசிகர்கள்.

வீடியோ பாருங்கள்

இந்திய தேசிய கொடி நாய் மேல் போர்த்தப்பட்டுள்ளதை போலவும், வங்கதேச தேசிய கொடி புலி மீது போர்த்தப்பட்டுள்ளதை போலவும் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் உணர்வுக்கு மதிப்பளிப்பது கடமை என்பதால், நமது வீடியோவில் இந்திய தேசிய கொடி மறைக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, June 14, 2017, 13:19 [IST]
Other articles published on Jun 14, 2017
English summary
Bangladeshi fan has insulted Indian national flag ahead of semi-final vs India on Thursday. The picture of showing a dog draped on the Indian national flag being chased by tiger has gone viral.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X