For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லி போன்றவர்கள் மட்டுமல்ல, தோனி, டிராவிட் போன்றவர்களும் தேவை.. ஐசிசி ரிச்சர்ட்சன் நெத்தியடி

By Aravinthan R

லண்டன் : இங்கிலாந்தில் கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் கிரிக்கெட் விளையாட்டில் நேர்மையை குலைக்கும் வகையில் நடந்துவரும் சம்பவங்களை பற்றி தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் பேசும்போது, ஷேன் வார்னே, கோஹ்லி, பென் ஸ்டோக்ஸ் போன்ற குறிப்பிட்ட மனப்பாங்கை காட்டும் வீரர்கள் மட்டுமல்ல டிராவிட், தோனி போன்ற வீரர்களும் தேவை. அப்பொழுதுதான் நாம் அனைவரும் சரியான இடத்தில் இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம் என கூறினார்.

icc chief says cricket needs character like dhoni dravid


அவர் பேசியதன் சுருக்கம், “தனிப்பட்ட நபரை இழிவாக பேசுதல், பேட்ஸ்மேன் ஆட்டமிழந்து செல்லும் போது வழியனுப்புதல், தேவையற்ற உரசல்கள், நடுவரின் முடிவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என மிரட்டுவது, இது போன்ற வகையில் இந்த விளையாட்டை உலகம் காண நாங்கள் விரும்பவில்லை. விளையாட்டின் மாண்போடு எப்படி விளையாடுவது என்பதை நாங்கள் கற்பித்து வருகிறோம்”

“கிரிக்கெட் களத்தில் வாழ்க்கையை விட முக்கியமான கதாபாத்திரங்கள் தேவைப்படுகின்றன. கொலின் மில்பர்ன்ஸ்கள், பிரெடி பிளின்டாப்கள், ஷேன் வார்னேக்கள், விராட் கோஹ்லிக்கள், பென் ஸ்டோக்ஸ்-கள் ஆகியோரைப் போல. அதே சமயம், அவர்களுக்கு இணையாக பிரான்க் வோர்ரல்ஸ், தோனிக்கள், டிராவிட்கள் ஆகியோரும் கிரிக்கெட்டுக்கு தேவை. அப்போதுதான், நாம் அனைவரும் சரியான இடத்தில் இருப்பதை உறுதி செய்ய முடியும்”

“பல பயிற்சியாளர்கள், அணி மேலாளர்கள், விரைவாக தங்கள் வீரர்களோடு இணைந்து கொண்டு, நடுவர், அவர்கள் அணிக்கு எதிராக செயல்படுகிறார் என குற்றம்சாட்டுகிறார்கள், ரெப்ரீயின் அறைக்கு புயலென சென்று புகார் அளிக்கிறார்கள். கடந்த சில மாதமாக வீரர்கள் பந்து தொடர்பான விதிகள் பற்றி விளக்கங்கள் கேட்கிறார்கள். அதன் விதிகள் மிக நேரானது. எளிமையானது. பந்தின் தன்மையை செயற்கை பொருட்களை கொண்டு மாற்றாதீர்கள். நீங்கள் மாட்டிக் கொண்டால் புகார் செய்யாதீர்கள். மற்றவர்கள் செய்தார்கள் என கூறாதீர்கள். நீங்கள் ஏமாற்றுகிறீர்கள்”. இவ்வாறு கூறினார் ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன்.

இவர் கூறுவது உண்மைதான். சமீப நாட்களாக கிரிக்கெட் களத்தில் இருந்து ஸ்கோர் மட்டும் வருவதில்லை, வீரர்கள் செய்யும் செயல்கள் குறித்தும் பல சர்ச்சைகள் வருகின்றன. முன்பு ஒன்றிரண்டு அணிகள் மட்டும் செய்து வந்த தேவையற்ற செயல்களை, தற்போது எல்லா அணிகளிலும் காண முடிகிறது. சமீபத்தில், தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் டு ப்ளேசிஸ், பந்து சேதம் தொடர்பான விதிகளில் விளக்கம் கேட்டு இருந்தார். அவரை இடித்துக் காட்டும் விதத்தில் அவருக்கு பதில் அளித்துள்ளார்.






Story first published: Thursday, August 9, 2018, 10:49 [IST]
Other articles published on Aug 9, 2018
English summary
ICC Chief says not only Kohli, stokes, but also characters like Dhoni and Dravid are important for cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X