For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதுதான் பெரிய மனுஷனுக்கு அழகு.. இந்தியா, நியூசிலாந்துக்கு "பெப்பே".. ஐசிசி பக்கா "ஸ்கெட்ச்"

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், டியூக் பந்துகளே பயன்படுத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது போட்டியின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

Recommended Video

WTC Final போட்டியில் Duke Ball தான் பயன்படுத்தப்படும்.. ICC அறிவிப்பால் சிக்கலில் அணிகள் | Oneidia

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அடுத்த பெரும் எதிர்பார்ப்பு இங்கிலாந்து டூர் தான். முதலில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான இப்போட்டி, வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது.

இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது.

 இங்கிலாந்தில் அடிப்பார்களா?

இங்கிலாந்தில் அடிப்பார்களா?

நம் ஊரில் சிக்ஸர்களை அடிக்கும் சூப்பர் ஸ்டார்கள், இங்கிலாந்து கண்டிஷனில் எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதே, தொடரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாகும். அப்படியொரு கடினமான, சவால் நிறைந்த ஆக்ரோஷமான தொடரை தான் இந்திய ரசிகர்கள் சந்திக்கவிருக்கிறார்கள். குறிப்பாக, டியூக் பந்துகள்.

 டியூக் பந்துகள்

டியூக் பந்துகள்

இன்று (மே.28) ஐசிசி வெளியிட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பிளேயிங் கண்டிஷனில், மிக முக்கியமான அறிவிப்பு இதுதான். ஆம்! "இந்தப் போட்டியில் கிரேட்-1 டியூக் பந்துகள்தான் பயன்படுத்தப்படும். இந்தியாவுக்கு ஏற்ப எஸ்ஜி பந்துகளோ அல்லது நியூஸிலாந்துக்கு ஏற்ப கூக்கபுரா பந்துகளோ பயன்படுத்தப்படாது" என்று ஐசிசி அறிவித்துள்ளது.

 இங்கிலாந்து தயாரிப்பு

இங்கிலாந்து தயாரிப்பு

இத்தொடரில், இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கப் போகும் மற்றொரு முக்கிய காரணி இந்த 'டியூக்' பந்துகள். ஆம்! இங்கிலாந்தில் பாரம்பரியம் பாரம்பரியமாக டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படுவது டியூக் பந்துகள் தான். இந்த பந்துகள் அனைத்தும் இங்கிலாந்திலேயே தயாரிக்கப்படுகிறது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளில், இங்கிலாந்தும், வெஸ்ட் இண்டீசும் தான் இந்த 'டியூக்' பந்துகளை பயன்படுத்துகிறார்கள்.

 அவுட் ஸ்விங்

அவுட் ஸ்விங்

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் கூக்கபுரா, டியூக் பந்துகள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இரண்டும் பார்க்க ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனா, இதில் பெரிய வித்தியாசமே stitching-ல் இருக்கிறது. டியூக் பந்தின் stitching... அதாவது தையல், இங்கிலாந்து பவுலர்களின் பாணிக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டிருக்கும். டியூக் பந்து முழுக்க வேகப்பந்து வீச்சு சப்போர்ட் பண்ணும் குணம் கொண்டது. ஆனால், 50 ஓவர் வரை தான் தாக்குப்பிடிக்கும். ஸ்பின்னர்களுக்கு Grip கிடைக்குறது ரொம்ப கஷ்டம். எனவே, அடிக்கடி பந்துகளை மாற்றும் நிலை கேப்டனுக்கு ஏற்படலாம். இது பாஸ்ட் பவுலர்களுக்கு சாதகமாக அமையலாம். ஏனெனில், புதிய பந்தில் இன் ஸ்விங், அவுட் ஸ்விங் என இரண்டும் அட்டகாசமாக இருக்கும்.

 ஜெயிக்கப் போவது யார்?

ஜெயிக்கப் போவது யார்?

ஸோ, ஒட்டுமொத்தமாக பார்க்கையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்பாக, எந்தவித பயிற்சிப் போட்டியும் இன்றி, நேரடியாக களம் காணும் இந்திய வீரர்களுக்கு, இங்கிலாந்தின் ஆஸ்தான டியூக் பந்துகள் மேலும் பாதகமாக அமையலாம். அதேசமயம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் எதிரணி நியூஸிலாந்துக்கும் இது சவாலான ஒன்றாக அமைகிறது. காரணம் அவர்களது ஃபேவரைட் கூக்கபுரா பந்துகள் தான். இப்போது எஸ்.ஜி.யும் இல்லை, கூக்கபுராவும் இல்லை. செம டஃப்பாக இருக்கப் போகிறது இறுதிப் போட்டி.

Story first published: Friday, May 28, 2021, 19:58 [IST]
Other articles published on May 28, 2021
English summary
ICC Cleared duke grade 1 balls wtc final 2021 - ஐசிசி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X