For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்ச்சையில் இந்திய அணி.. கிரிக்கெட்டையும் பாஜக காவியாக்கிவிட்டது.. எதிர்க்கட்சிகள் பரபரப்பு புகார்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி காவி நிறத்தில் தேர்வு செய்யப்பட்டதற்கு பாஜகதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது.

Recommended Video

இந்திய அணியின் காவி ஜெர்சிக்கு பாஜக காரணமா? | கிளம்பிய எதிர்ப்புகள்

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி காவி நிறத்தில் தேர்வு செய்யப்பட்டதற்கு பாஜகதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஹோம் ஜெர்சியாக தற்போது நீல நிறம் பயன்படுத்தப்படுகிறது. அதே சமயம் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்த முறை ஹோம் - அவே ஜெர்ஸி முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ஆனால் ஒரே மாதிரி உடை கொண்ட இரண்டு அணிகள் மோதும் நேரத்தில் ஒரு அணி உடையை மாற்ற வேண்டி இருக்கும். உதாரணமாக இங்கிலாந்தை எதிர்கொள்ளும் நேரத்தில் இந்தியா தனது உடைக்கு பதிலாக வேறு நிறத்தில் உடை அணிய வேண்டும்.

என்ன உடை

என்ன உடை

இது கால்பந்தில் பல வருடங்களாக வழக்கத்தில் இருக்கும் முறைதான். உலகக் கோப்பையில் விளையாடும் 5 அணிகள் தங்கள் ஜெர்ஸியை சில போட்டிகளுக்கு மட்டும் மாற்ற வேண்டும். இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் நீல நிற உடை கொண்டது. வங்கதேசம், தென் ஆப்ரிக்கா, ஆகியவை பச்சை நிற உடை கொண்டது. இந்த அணிகள் மட்டும் தங்கள் ஜெர்சியை மாற்ற வேண்டும்.

காவி நிறம்

காவி நிறம்

இந்திய அணியின் தற்போதைய ஜெர்சி நீல நிறத்தில் இருக்கும். சில இடங்களில் மட்டும் காவி நிற கோடுகள் இருக்கும். இந்த நிலையில் இந்த காவி நிறத்தை பெரிதாக்கி, காவி நிற ஜெர்சியை பிசிசிஐ வெளியிட்டு இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக 30ம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா இந்த காவி நிற ஜெர்சியைத்தான் அணிய போகிறது.

புகார் என்ன

புகார் என்ன

இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் வரிசையாக புகார்களை அடுக்கி உள்ளன. காங்கிரஸ் எம்எல்ஏ நசீம் கான் இதுகுறித்த அளித்த பேட்டியில், பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே இப்படித்தான் நடக்கிறது. அவர்கள் காவி நிறத்தை மக்களிடையே மோசமாக பரப்ப நினைக்கிறார்கள். அது உடனே களையப்பட வேண்டும், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சமாஜ்வாதி கட்சி

சமாஜ்வாதி கட்சி

அதேபோல் இதற்கு சமாஜ்வாதி கட்சிதான் முதலில் குரல் கொடுத்தது. அக்கட்சி, பாஜகவின் காவி அரசியலை கிரிக்கெட்டுக்குள்ளும் கொண்டு வந்துவிட்டது. ஒரு இஸ்லாமியர்தான் இந்திய கொடியை வடிவமைத்தது. அதை நாம் மறக்க கூடாது. இந்திய அணியின் உடையில் மூவர்ணம்தான் இருக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துள்ளது. இதனால் தேவையில்லாமல் இந்திய கிரிக்கெட் அணி சர்ச்சையில் சிக்கி உள்ளது.

Story first published: Thursday, June 27, 2019, 7:41 [IST]
Other articles published on Jun 27, 2019
English summary
ICC Cricket World Cup 2019: BJP tries to saffronize the Indian cricket team says, opponents after jersey controversy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X