For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன இது.. இப்படி ஒரு விஷயம் நடந்ததே இல்லை.. எதிரணிக்கும் பீல்டிங் செட் செய்த தோனி.. வீடியோ!

Recommended Video

World cup 2019 Dhoni sets fielding | எதிரணிக்கு ஃபீல்டிங்கை சரி செய்த தோனி

லண்டன்: நேற்று வங்கதேசம் அணிக்கு தோனி பீல்டிங் செட் செய்த வீடியோ இணையத்தில் பெரிய வைரலாகி உள்ளது.

இந்திய அணியின் கேப்டனாக தற்போது கோலி இருக்கிறார். ஆனால் பல சமயங்களில் இந்திய அணியில் முக்கிய முடிவுகளை எடுப்பது என்னவோ தோனிதான்.

பல பேர் இப்போதும் கூட தோனிதான் கேப்டன். கோலி சும்மாதான் கேப்டன் என்ற பொறுப்பில் இருக்கிறார் என்று விமர்சனங்கள் வைப்பது உண்டு. இந்த நிலையில்தான் தோனி வங்கதேச பீல்டிங்கையும் மாற்றி ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.

ICC World Cup 2019:கிடைத்த வாய்ப்பில் கிடா வெட்டிய ராகுல்..! கழற்றி விடப்படும் விஜய் சங்கர்..?? ICC World Cup 2019:கிடைத்த வாய்ப்பில் கிடா வெட்டிய ராகுல்..! கழற்றி விடப்படும் விஜய் சங்கர்..??

என்ன போட்டி

என்ன போட்டி

நேற்று இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் எடுத்தது. அதன்பின் வங்கதேசம் அணி 264 ரன்களுக்கு 49.3 ஓவரில் ஆல் அவுட் ஆனது. இதனால் அந்த அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

என்ன செய்தார்

என்ன செய்தார்

இந்த போட்டியில் ஷபீர் ரகுமான் 40வது ஓவர் வீசிக்கொண்டு இருக்கும் போது அந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. பவுலிங் போட வந்த ரகுமானை நிறுத்திவிட்டு பேட்டிங் செய்த தோனி வங்கதேச பீல்டரை இடம்மாறி நிற்க சொன்னார். அவர் நிற்பது சரியல்ல என்று கூறி அவரை மாறி நிற்க சொன்னார். இதனால் ரகுமான் தனது பீல்டரை உடனே மாறும்படி கூறினார்.

மாற்றம் இல்லை

மாற்றம் இல்லை

பொதுவாக எதிரணி வீரர்கள் இப்படி பீல்டிங்கை மாற்ற மாட்டார்கள். ஆனால் தோனி நேற்று இப்படி செய்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஏன் அவர் இப்படி செய்தார், வங்கதேச வீரர்கள் எப்படி அதற்கு பொம்மை போல தலையாட்டினார்கள் என்று நிறைய கேள்வி எழுந்துள்ளது.

ஏன் இப்படி

இதற்கான பதில் தற்போது கிடைத்து இருக்கிறது. அதன்படி தோனி பேட்டிங் செய்து கொண்டு இருக்கும் போது வங்கதேச பீல்டர் நடந்து கொண்டு இருந்துள்ளார். இது தோனிக்கு இடைஞ்சலாக இருந்துள்ளது. பவுலிங் போட்ட பின்பே பீல்டர்கள் நகர வேண்டும். இதனால் அவரை குற்றஞ்சாட்டும் விதமாக தோனி ஒரு இடத்தில் நிற்கும்படி சைகை காட்டினார்.

கேட்டுக்கொண்டார்

கேட்டுக்கொண்டார்

பொதுவாக வங்கதேச வீரர்கள் களத்தில் எதிரணி வீரர்களை அதிகம் சீண்டுவது வழக்கம். ஆனால் அவர்கள் தோனியை சீண்டும் போதெல்லாம் அவர் அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார். நேற்று பீல்டிங்கில் இப்படி ஏமாற்றம் செய்ய முயலும் போது உடனே அவர் அதை கண்டித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, May 29, 2019, 14:24 [IST]
Other articles published on May 29, 2019
English summary
ICC Cricket World Cup 2019: Dhoni sets fielding for Bangladesh team in yesterday match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X