“தோற்றாலும் விட மாட்டிக்கிறாங்களே...” இந்திய அணிக்கு அடுத்த அதிர்ச்சி.. கருணையே காட்டாத ஐசிசி!

பெர்மிங்கம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த சோகத்தில் இருந்த இந்திய அணிக்கு மற்றொரு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Indian Team-க்கு 8th Captain! Kohli முதல் Dhawan வரை | Aanee's Appeal | *Cricket

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மோசடி செய்கிறதா இங்கிலாந்து அணி.. டியூக் பந்தால் ஜெய்க்கும் ஸ்டோக்ஸ்? 3 முறை புகார் அளித்த இந்தியா மோசடி செய்கிறதா இங்கிலாந்து அணி.. டியூக் பந்தால் ஜெய்க்கும் ஸ்டோக்ஸ்? 3 முறை புகார் அளித்த இந்தியா

இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற கனவு 2 - 2 என தகர்ந்தது.

 அடுத்த பிரச்சினை

அடுத்த பிரச்சினை

இந்த சோகத்தில் இருந்தே இந்திய வீரர்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், அடுத்த அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. அதாவது இந்திய அணிக்கு அபாரதமும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஸ்லோ ஓவர் ரேட் என ஐசிசி அறிவித்துள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இங்கிலந்துடனான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக புகார் எழுந்தது. ஐசிசி ஆர்டிக்கல் 2.22-ன் படி தாமதமான ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் குறைக்கப்படும். இதே போல ஒவ்வொரு ஓவருக்கும் இந்திய அணியின் போட்டி கட்டணத்தில் 20 % தொகை அபராதமாக விதிக்கப்படும்.

 2 ஓவர்களுக்கு தாமதம்

2 ஓவர்களுக்கு தாமதம்

அந்த வகையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2 ஓவர்கள் தாமதமாக்கியதால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 2 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டிக் கட்டணத்தில் இருந்து 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னேற்றம்

பாகிஸ்தான் முன்னேற்றம்

இந்த தண்டனையால், இந்திய அணியை பாகிஸ்தான் முந்தியுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி 3வது இடத்தில் இருந்து வந்தது. ஆனால் இப்போது 2 புள்ளிகள் குறைக்கப்பட்டதால் இந்திய அணி 4வது இடத்திற்கு சென்றுவிட்டது. பாகிஸ்தான் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Team India got fined in england series ( இந்தியா vs இங்கிலாந்து தொடர் ) இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, July 6, 2022, 17:42 [IST]
Other articles published on Jul 6, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X