For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தலையிட்ட அரசு.. ஐசிசி விதியை மீறிய தென்னாப்பிரிக்க அணி.. மொத்தமாக கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்படுமா?

துபாய்: 2020 ஐபிஎல்லில் தென்னாப்பிரிக்க அணியின் வீரர்கள் பிசியாக உள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு மொத்தமாக தடை விதிக்க ஐசிசி நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருகிறது.

அமீரகத்தில் தற்போது ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் தென்னாப்பிரிக்க வீரர்கள் பலர் ஆடி வருகிறார்கள். முக்கியமாக முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தொடங்கி மூத்த வீரர் டி காக் வரை பலர் தற்போது ஐபிஎல்லில் ஆடி வருகிறார்கள்.

ஒரு பக்கம் ஐபிஎல் போட்டிகளில் அந்நாட்டு வீரர்கள் கவனம் செலுத்தி உள்ள நிலையில் இன்னொரு பக்கம் அந்த நாட்டின் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக ஐசிசி கொதித்து எழுந்துள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

ஐசிசி விதியின்படி ஒரு நாட்டின் கிரிக்கெட் போர்ட் என்பது சுதந்திரமாக செயல்படும் அமைப்பாக இருக்க வேண்டும். அரசு மூலம் கட்டுப்படுத்தக்கூடிய அமைப்பாக இருக்க கூடாது.ஒரு நாட்டின் கிரிக்கெட் போர்ட் விஷயங்களில் அரசு தலையிட்டால் அந்த கிரிக்கெட் அணிக்கு ஐசிசி தடை விதிக்க முடியும்.

தென்னாப்பிரிக்க அணி

தென்னாப்பிரிக்க அணி

தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கும் இதேபோல் தடை விதிக்கத்தான் ஐசிசி ஆலோசனை செய்து வருகிறது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போர்டில் இருக்கும் உறுப்பினர்கள் ஊழல் செய்துவிட்டதாக அந்த நாட்டில் புகார் எழுந்தது. இதை விசாரிக்க வேண்டும் என்று அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

மோசடி

மோசடி

நிதி மோசடி தொடங்கி பல புகார்கள் அந்த அணியின் போர்ட் மீது வைக்கப்பட்டது. இதனால் அணி நிர்வாகத்தில் அரசு தலையிட்டு விசாரணை நடத்தியது. இதனால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் சிஇஓ தபாங் மோர் சில வாரங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். ஆனால் இந்த அரசு விசாரணையில் சில முக்கிய நபர்கள் தப்பித்ததை அந்நாட்டு அரசு கண்டுபிடித்துள்ளது.

நதி மதேத்வா

நதி மதேத்வா

சில முக்கியமான நபர்கள் அரசின் விசாரணையில் இருந்து தப்பித்ததை அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் கண்டுபிடித்தார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் போர்ட் மீது மீண்டும் விசாரணை நடத்தும் முடிவை அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் நதி மதேத்வா எடுத்துள்ளார். இது தொடார்பாக் அவர் ஐசிசிக்கும் தகவல் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.

கடிதம் எழுதினார்

கடிதம் எழுதினார்

இந்த நிலையில் அணியின் நிர்வாகத்தில் அரசு தலையிட்ட காரணத்தால் விரைவில் அணிக்கு தடை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் வந்தது. இது தொடர்பாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி நிர்வாகம் ஐசிசிக்கு கடிதம் எழுதினால், மொத்தமாக அணிக்கு தடை விதிக்கப்படும். ஆனால் தென்னாப்பிரிக்க அணி நிர்வாகிகள், இது தொடர்பாக ஐசிசிக்கு கடிதம் எழுதுவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

தடை

தடை

இதேபோல் அரசு தலையிட்ட காரணத்தால்தான் ஜிம்பாவே கிரிக்கெட் அணி தடை விதிக்கப்பட்டது. இதே நிலை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இது தொடர்பாக ஐசிசி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களிடமும் விரைவில் விசாரணை நடத்தும். இவர்கள் தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள்.

Story first published: Thursday, October 15, 2020, 15:51 [IST]
Other articles published on Oct 15, 2020
English summary
ICC focuses on the South African cricket board after the government investigation
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X