For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

104 நாடுகளுக்கு டி-20 கிரிக்கெட் சர்வதேச அந்தஸ்து அளிக்க ஐசிசி அதிரடி முடிவு

104 நாடுகளைச் சேர்ந்த ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு சர்வதேச டி-20 அந்தஸ்து அளிக்க ஐசிசி முடிவு செய்துள்ளது.

கொல்கத்தா: டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு பெருகி வரும் ஆதரவை அடுத்து, 104 நாடுகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் ஆடவர் அணிகளுக்கு, டி-20 அந்தஸ்து அளிக்க ஐசிசி முடிவு செய்துள்ளது.

ஐசிசியின் செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில், கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ICC to give international status for 104 T-20 nations

அதில் முக்கியமான ஒரு முடிவு இன்று எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 104 நாடுகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் ஆடவர் டி-20 கிரிக்கெட் அணிகளுக்கு டி-20 அந்தஸ் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியா உள்பட 12 முழுநேர உறுப்பு நாடுகளைத் தவிர, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, ஹாங்காங், யுஏஇ, ஓமன், நேபாளம் என, 18 நாடுகளுக்கு டி-20 அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது, 104 நாடுகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் ஆடவர் அணிகளுக்கு டி-20 அந்தஸ்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதந்படி, இந்தாண்டு ஜூலை 1 முதல் விளையாடப்படும் அனைத்து மகளிர் டி-20 போட்டிகள் மற்றும், 2019 ஜனவரி 1 முதல் விளையாடப்படும் ஆடவர் டி-20 போட்டிகள் அனைத்துக்கும் சர்வதேச அந்தஸ்து அளிக்கப்பட உள்ளது.

மேலும், சர்வதேச அளவில், டி-20 போட்டிகளுக்கான தரவரிசையும் அளிக்கப்பட உள்ளது.

Story first published: Thursday, April 26, 2018, 17:04 [IST]
Other articles published on Apr 26, 2018
English summary
ICC decides to give international status to all 104 nation men and women t-20 teams.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X