For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி போட்ட புத்தம் புதிய மாஸ் விதி!! இனி முடிவு வேறு மாதிரியா இருக்கும்

இனிவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சூப்பர் ஓவர் முறையில் ஐசிசி புத்தம் புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

Recommended Video

ICC introduces new super over rule | சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசியின் புதிய விதி!

டெல்லி: இனிவரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சூப்பர் ஓவர் முறையில் ஐசிசி புத்தம் புதிய விதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் போட்டியின் முடிவில் இரு அணிகளும் ஒரே ஸ்கோர் எடுத்து இருக்கும் பட்சத்தில் சூப்பர் ஓவர் நடத்தப்படும். பின்னர் சூப்பர் ஓவரில் அதிக ரன்கள் எடுத்த அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

மேலும் சூப்பர் ஓவரில் போட்டி டை ஆனால் அதிக பவுண்டரிகள் மற்றும் ரன் ரேட் அடிப்படையிலும் முடிவு நிர்ணயிக்கப்படும். இதுதான் வழக்கம்.

உலக கோப்பை சொதப்பல்

உலக கோப்பை சொதப்பல்

2019 உலக கோப்பை இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா 241 ரன்கள் எடுத்தனர்.சூப்பர் ஓவர் சுற்றிலும் இவ்விரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்ததால் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பலரும் இந்த முடிவை ஏற்காமல் எதிர்த்தனர். மேலும் இது உலக கோப்பை சொதப்பல் என்று பலராலும் கருதப்பட்டது.

ரசிகர்கள் வைத்த கோரிக்கை

ரசிகர்கள் வைத்த கோரிக்கை

ஐசிசி எடுத்த இந்த முடிவை பெரும்பாலான மக்கள் எதிர்த்தனர். இது இங்கிலாந்து அணிக்கு சாதகமான முடிவு என்றும் நியூஸிலாந்து அணியே வெற்றிக்கு தகுந்த அணி என்று சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். மேலும் இன்னும் ஒரு சூப்பர் ஓவர் வைத்து இருக்கலாம். அப்படி வைத்து அதில் வெற்றி பெற்ற அணியை வின்னராக அறிவித்து இருக்கலாம் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

ஐசிசி

ஐசிசி

இதன் எதிரொலியாக இனி சர்வதேச கிரிக்கெட் தொடரில் ஒரு புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. அது என்னவென்றால், இனி ஐசிசி தொடர்களான ஒருநாள் மற்றும் டி-20 உலகக்கோப்பை தொடர்களில், பவுண்டர்கள் அடிப்படையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் விதி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாறாக இத்தொடர்களின் லீக் போட்டிகள் டை ஆகும் பட்சத்தில் போட்டியின் முடிவு டை என அறிவிக்கப்படும்.

மீண்டும் சூப்பர் ஓவர்

மீண்டும் சூப்பர் ஓவர்

ஆனால் அரையிறுதி மற்றும் ஃபைனல் போட்டிகள் டையில் முடிந்தால், அப்போது போட்டியின் முடிவு எட்டும் வரை சூப்பர் ஓவர் தொடரும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் சர்வதேச கிரிக்கெட்டில் இந்த புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் எப்பொழுது

சர்வதேச கிரிக்கெட்டில் எப்பொழுது

மேலும் ஐசிசி கொண்டுவந்துள்ள இந்த விதி முறை சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் சிலரோ இந்த விதி முறை உலக கோப்பை இறுதி போட்டியில் நடைமுறை படுத்தி இருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

Story first published: Tuesday, October 15, 2019, 13:34 [IST]
Other articles published on Oct 15, 2019
English summary
The international cricket council has introduced new multiple supers overrule in the upcoming cricket matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X