கோலி சென்றதும் முதலிடமும் சென்றது..!! ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு..!!

துபாய்: ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி சரிவை கண்டுள்ளது. அதுவும் விராட் கோலி தனது டெஸ்ட் கேப்டன் பதவியை விலகிய நிலையில், இந்த பட்டியல் வெளியானது.

டெஸ்ட், அணி மற்றும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலையும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

4 சதம் விளாசியும் சி.எஸ்.கே. வீரருக்கு இடமில்லை- ஆடுகளத்தில் டிவிஸ்ட்.. பும்ரா அபாரம்4 சதம் விளாசியும் சி.எஸ்.கே. வீரருக்கு இடமில்லை- ஆடுகளத்தில் டிவிஸ்ட்.. பும்ரா அபாரம்

இந்த பட்டியலில் யார் எந்த இடம் பிடித்துள்ளனர் என்பதை தற்போது விரிவாக பார்க்கலாம்

ஆஸி. முதலிடம்

ஆஸி. முதலிடம்

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்றது மூலம் 119 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்த நியூசிலாந்து அணி 2வது இடத்தில் 117 புள்ளிகளுடன் உள்ளது.

இந்தியா சரிவு

இந்தியா சரிவு

தொடர்ந்து முதலிடத்தில் இருந்த இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் 3வது இடத்துக்கு சரிந்துள்ளது. இந்தியா 3வது டெஸ்டில் தோல்வி அடைந்த போது கோலி தான் கேப்டன் என்றாலும், அவர் பதவியிலிருந்து சென்றவுடன் நம்பர் 1 இடமும் போய்விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

மற்ற இடங்கள்

மற்ற இடங்கள்

4வது இடத்தில் இங்கிலாந்தும், 5வது இடத்தில் தென்னாப்பிரிக்க அணியும், 6வது இடத்தில் பாகிஸ்தான் அணியும், 7வது இடத்தில இலங்கையும், 8வது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகளும், 9வது இடத்தில் வங்கதேசமும், 10வது இடத்தில் ஜிம்பாப்வே அணியும் உள்ளது.

கோலி முன்னேற்றம்

கோலி முன்னேற்றம்

பேட்ஸ்மேன்களுக்கான டெஸ்ட் தரவரிசை பட்டியலில் மார்னஸ் லாபஸ்சேங் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஷஸ் தொடரில் தொடரில் சதம் விளாசிய ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹேட் ரோகித் சர்மாவுடன் 5வது இடத்தை பகிர்ந்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 9வது இடத்திலிருந்து முன்னேறி 7வது இடத்துக்கு வந்துள்ளார்.

இனி இதை சரி செய்வோம்.. Indian Team தோல்வி குறித்து KL Rahul பேச்சு
பந்துவீச்சாளர்கள் தரவரிசை

பந்துவீச்சாளர்கள் தரவரிசை

டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் பாட் கம்மின்ஸ் முதலிடத்திலும், அஸ்வின் 2வது இடத்திலும் தென்னாப்பிரிக்க வீரர் ரபாடா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். பும்ரா 10வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் அஸ்வின் 2வது இடமும், ஜடேஜா 3வது இடத்திலும் உள்ளனர்

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ICC Latest Test Rankings Australia in Top Position கோலி சென்றதும் முதலிடமும் சென்றது..!! ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு..!!
Story first published: Thursday, January 20, 2022, 12:50 [IST]
Other articles published on Jan 20, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X