For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்

எட்ஜ்பாஸ்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் விலாசிய ரிஷப் பண்ட் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

Recommended Video

ICC Test Rankings வெளியீடு! இந்திய வீரர்கள் நிலை? *Cricket

ஐசிசி வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 6 ஆண்டுகளுக்குப் பிறகு டாப் 10 இடத்தை விட்டு விலகி உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்டில் விராட் கோலி 11 மற்றும் 20 நன்களை மட்டுமே சேர்த்தார் .

சரிவும், முன்னேற்றமும்

சரிவும், முன்னேற்றமும்

இதன் மூலம் ஒன்பதாவது இடத்திலிருந்து 13 வது இடத்திற்கு கோலி சரிவை சந்தித்துள்ளார். இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிவரும் பாரிஸ்டோ கடந்த மூன்று டெஸ்டில் நான்கு சதம் விளாசி உள்ளார். இதன் மூலம் 11 இடங்களை முன்னேறி தற்போது பத்தாவது இடத்தில் பிடித்துள்ளார். பாரிஸ்டோ நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் 1218 ரன்களை விளாசியுள்ளார்.

முதல் 4 இடங்கள்

முதல் 4 இடங்கள்

இந்தியாவுக்கு எதிராக 142 ரன்கள் விளாசிய ஜோ ரூட் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள மானஸ் லாபஸ்செயிங்கை காட்டிலும் 44 புள்ளிகள் கூடுதல் பெற்று 923 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர்களில் தற்போது ஜோ ரூட் 19 வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்மித் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் நான்காவது இடத்திலும் உள்ளனர்.

ரிஷப் பண்ட் முன்னேற்றம்

ரிஷப் பண்ட் முன்னேற்றம்

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் தற்போது ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். 11 வது இடத்தில் இருந்த அவர் ஆறு இடங்கள் முன்னேறி இருக்கிறார். இந்திய டெஸ்ட் அணி கேப்டன் ரோகித் சர்மா ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறார். பந்து வீச்சாளர்களுக்கான் பட்டியலில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஜடேஜா முதலிடம்

ஜடேஜா முதலிடம்

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் நாதன் லயன் இலங்கைக்கு எதிராக முதல் டெஸ்டில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தி தற்போது ஐந்து இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் பாட் கம்மின்ஸ் , இரண்டாவது இடத்தில் இந்திய வீரர் அஸ்வினும் , மூன்றாவது இடத்தில் பும்ராவும் தங்களது இடத்தை தக்க வைத்துள்ளனர். இதை போன்று டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் சதம் விளாசிய ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கிறார் . அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Story first published: Wednesday, July 6, 2022, 23:33 [IST]
Other articles published on Jul 6, 2022
English summary
ICC Latest test rankings – Rishabh pant biggest jump in batting6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X