For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி.ஆர்.எஸ். சர்ச்சையால் கத்திய கோலி.. தடை விதிக்கப்படுமா.. போட்டி நடுவர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!

கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தால் பெரும் சர்ச்சை உருவானது

அஸ்வின் பந்துவீச்சில் டீன் எல்காருக்கு நடுவர் எல்.பி.டபிள்யூ வழங்கினார். ஆனால் டி.ஆர்.எஸ். முறையில், Hawk eye தொழில் நுட்பத்தில் அது அவுட் இல்லை என அறிவிக்கப்பட்டது

இதனால் அதிர்ச்சி அடைந்த கள நடுவர், அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார். இந்த சம்பவத்தால் இந்திய வீரர்கள் கடுப்பாகினர்

எல்கரின் டிஆர்எஸ் தான் தோல்விக்கு காரணம்?.. விராட் கோலி கூறிய விளக்கம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்! எல்கரின் டிஆர்எஸ் தான் தோல்விக்கு காரணம்?.. விராட் கோலி கூறிய விளக்கம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!

டி.ஆர்.எஸ் சர்ச்சை

டி.ஆர்.எஸ் சர்ச்சை

ஸ்டம்ப் மைக்கில் சென்று விராட் கோலி கடுமையாக பேசினார். அஸ்வினும், இதில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டினார். 11 வீரர்களுக்கு எதிராக ஒரு நாடே செயல்படுவதாக கே.எல்.ராகுல் குற்றஞ்சாட்டினார். இந்திய வீரர்களின் இந்த செயல்பாட்டுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், ஒரு பக்கம் ஆதரவும் வந்தது.

மைக்கேல் வாகன்

மைக்கேல் வாகன்

இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், இந்திய வீரர்கள் களத்தில் நடந்து கொண்டதை ஏற்று கொள்ளவே முடியாது என்றும், விராட் கோலி ஒரு கேப்டன் என்பதையே மறந்து செயல்பட்டார் என்றும் விமர்சனம் செய்தார். இதனால் விராட் கோலியை ஐ.சி.சி. சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று அவர் குற்றஞ்சாட்டினார்

ஐ.சி.சி. நடுவர்

ஐ.சி.சி. நடுவர்

இதனிடையே, களத்தில் விராட் கோலி இவ்வாறு நடந்து கொண்டது குறித்து ஐ.சி.சி. இந்திய அணி நிர்வாகத்திற்கு வெறும் எச்சரிக்கையுடன் நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்க அணியும், தொலைக்காட்சி நிர்வாகமும் எவ்வித புகாரும் போட்டி நடுவருக்கு அளிக்கவில்லை என்பதால், இதுவரை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இந்த நிலையில், விராட் கோலிக்கும், மற்ற இந்திய வீரர்களுக்கும் போட்டியின் ஊதியத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படலாமே தவிர, தடை விதிக்க வாய்ப்பில்லை என்றும் ஐ.சி.சி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 19வது தேதி தொடங்குகிறது. இதற்கான பயிற்சியை இந்திய அணி நாளை மறுநாள் மேற்கொள்ள உள்ளது.

Story first published: Saturday, January 15, 2022, 17:26 [IST]
Other articles published on Jan 15, 2022
English summary
ICC Match Referee on DRS Controversy and action against virat kohli டி.ஆர்.எஸ். சர்ச்சையால் கத்திய கோலி.. தடை விதிக்கப்படுமா.. போட்டி நடுவர் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X