For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி தொடர்கள் ஒளிபரப்பு உரிமை.. பிசிசிஐ பாணியில் அதிரடி.. ஸ்டார், சோனி இடையே கடும் போட்டி

துபாய்: அடுத்த 8 அணிகளுக்கான ஐசிசி கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

இது IPL Style! யாருக்கு ICC Media Rights? | Aanee's Appeal | *Cricket | OneIndia Tamil

பிசிசிஐ, அடுத்த 5 ஆண்டுகளான ஐபிஎல் போட்டிகளை 4 பேக்கஜ்களாக விற்றது. இதன் மூலம் இந்திய தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் நிறுவனமும்.

இந்திய டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனமும், உலக நாடுகளின் ஒளிபரப்பு உரிமையை டைம்ஸ் மற்றும் வியாகாம் நிறுவனமும் ஏலத்தில் எடுத்தது.

ஒரே தொடரால் இப்படி ஒரு மாற்றமா.. ஐசிசி தரவரிசைப்பட்டியல்.. புதிய உச்சம் சென்ற இந்திய வீரர்! ஒரே தொடரால் இப்படி ஒரு மாற்றமா.. ஐசிசி தரவரிசைப்பட்டியல்.. புதிய உச்சம் சென்ற இந்திய வீரர்!

8 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்

8 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்

இதன் மூலம் பிசிசிஐ 48,070 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. தற்போது ஐசிசியும் அடுத்த 8 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் போட்டிகளுக்கான உரிமையை ஒப்பந்தம் மூலம் விற்க உள்ளது. கடந்த முறை ஒட்டுமொத்தமாக குளோபல் ரைட்ஸ் என்ற பெயரில் 8 ஆண்டுகளுக்கு ஸ்டார் நிறுவனத்திற்கு ஐசிசி விற்றது.

பிசிசிஐ பாணியில்

பிசிசிஐ பாணியில்

தற்போது, பிசிசிஐ போல் வருமானத்தை பெருக்க முடிவு எடுத்துள்ள ஐசிசி, இந்தியாவில் மட்டும் ஐசிசி போட்டிகளை தனியாக விற்க முடிவு எடுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு பகுதிக்கும் தனி உரிமை என்ற வகையில் ஐசிசி விற்க உள்ளது. மேலும், ஆடவர் , பெண்களுக்கு என போட்டிகளுக்கான உரிமங்களை தனியாக விற்கவும் முடிவு எடுத்துள்ளது.

16 ஐசிசி தொடர்கள்

16 ஐசிசி தொடர்கள்

மேலும் தொலைக்காட்சியை விட டிஜிட்டலும் வளர்ந்து வருவதால், அதற்கு என தனி உரிமையை விற்க ஐசிசி முடிவு எடுத்துள்ளது. அடுத்த 8 ஆண்டுகளில் ஆடவர் பிரிவில் டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, 50 ஓவர் உலக கோப்பை, அண்டர் 19 உலக கோப்பை என 16 தொடர்களும், மகளிர் பிரிவில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு 6 தொடர்களும் நடைபெற உள்ளது.

362 போட்டிகள்

362 போட்டிகள்

ஒட்டுமொத்தமாக ஆடவர் பிரிவில் 362 போட்டிகளும், பெண்கள் பிரிவில் 103 போட்டிகளும் இடம் பெறும். ஜூனியர் கிரிக்கெட் போட்டிகள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றாலும், அது மெயின் போட்டிகளில் சேராது. ஜூன் 20ஆம் தேதி முதல் இதற்கான ஒப்புந்த புள்ளிகள் கோரப்பட உள்ளன. யார் அதிக பணம் தருவதாக கூறுகிறார்களோ, அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படும்.

Story first published: Saturday, June 18, 2022, 17:00 [IST]
Other articles published on Jun 18, 2022
English summary
ICC Media rights for next 8 year tender release ஐசிசி தொடர்கள் ஒளிபரப்பு உரிமை.. பிசிசிஐ பாணியில் அதிரடி.. ஸ்டார், சோனி இடையே கடும் போட்டி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X