குழப்பத்தை உடைத்து.. WTC "சிஸ்டத்தை" அப்படியே மாற்றிய ஐசிசி.. ரகளையான அறிவிப்பு

மும்பை: அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதிய புள்ளிகள் விதிமுறைகளை ஐசிசி இன்று (ஜுலை.14) வெளியிட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷி தொடரை இந்திய ரசிகர்கள் எவரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள். ஏனெனில், பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த மாதம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது கோலி தலைமையிலான இந்திய அணி.

இந்நிலையில் 2021 முதல் 2023 வரையிலான டெஸ்ட் போட்டிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இரண்டாம் சுற்றுக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்-ன் பரிசுத்தொகை.. படைக்கப்பட்ட சாதனைகள்.. மிரளவைக்கும் புள்ளிவிவரங்கள் - விவரம்டெஸ்ட் சாம்பியன்ஷிப்-ன் பரிசுத்தொகை.. படைக்கப்பட்ட சாதனைகள்.. மிரளவைக்கும் புள்ளிவிவரங்கள் - விவரம்

 புள்ளிகளின் சதவிகிதம்

புள்ளிகளின் சதவிகிதம்

இந்த சூழலில், இந்த இரண்டாம் சுற்று தொடருக்கான புதிய புள்ளிகள் விதிமுறைகளை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த தொடரில், அணிகள் ஒவ்வொன்றும் பெரும் புள்ளிகளின் சதவிகிதத்தின் அடிப்படையில், டாப் 2 அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 பகிரப்படும் புள்ளிகள்

பகிரப்படும் புள்ளிகள்

அதாவது, ஒவ்வொரு போட்டிக்கும் மொத்தம் 12 புள்ளிகள் வழங்கப்பட உள்ளது. ஒரு அணி வெற்றிப் பெறும் பட்சத்தில், அந்த அணிக்கு 100 சதவிகிதம் அதாவது 12 புள்ளிகள் அப்படியே வழங்கப்படும். ஒருவேளை போட்டி டை (சமன்) ஆகும் பட்சத்தில், இரு அணிகளுக்கும் 6 புள்ளிகளாக பகிர்ந்து அளிக்கப்படும். அதேசமயம், ஒரு போட்டி வெற்றி தோல்வி இன்று டிரா ஆகும் பட்சத்தில், 4 புள்ளிகள் (33.33 சதவீதம்) வழங்கப்படும். போட்டியில் தோற்கும் அணிக்கு 0 புள்ளிகள் தான்.

 டாப் மோஸ்ட் 60

டாப் மோஸ்ட் 60

அதேசமயம், இந்த மொத்த புள்ளிகள் என்பது ஒவ்வொரு தொடருக்கும் வேறுபடும். அதாவது ஒரு தொடரில் எத்தனை போட்டிகள் நடைபெறுகிறது என்பதைப் பொறுத்து புள்ளிகள் எண்ணிக்கை மாறுபடும். அதாவது,

  • 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் - மொத்தம் 24 புள்ளிகள்
  • 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் - மொத்தம் 36 புள்ளிகள்
  • 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் - மொத்தம் 48 புள்ளிகள்
  • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் - மொத்தம் 60 புள்ளிகள்

என்று இவ்வாறு மொத்த புள்ளிகள் தொடருக்கு ஏற்ப மாறுபடும்.

Italy win Euro 2020, ICC -யை கலாய்த்த Jimmy Neesham | Oneindia Tamil
 மாற்றப்பட்ட சிஸ்டம்

மாற்றப்பட்ட சிஸ்டம்

இதுகுறித்து ஐசிசி தற்காலிக தலைமை நிர்வாகி ஜெஃப் அலார்டிஸ் கூறுகையில், "முந்தைய புள்ளிகள் முறை எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்று எங்களுக்கு பலதரப்பில் இருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டது. இந்த புதிய முறை மூலம், எங்களுக்கு எல்லா அணிகளையும் எளிதில் ஒப்பிட்டு பார்க்க வழிவகை கிடைத்திருக்கிறது. இதன் மூலம், ஒவ்வொரு தொடரிலும், அவர்கள் எத்தனை போட்டியில் விளையாடியிருந்தாலும் அவர்களது செயல்திறனை எங்களால் அறிய முடியும்" என்று கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
ICC New Points System for WTC 2021-23 Cycle - ஐசிசி
Story first published: Wednesday, July 14, 2021, 13:14 [IST]
Other articles published on Jul 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X