For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன மாதிரியான நட்பு... தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய ஐசிசி

டெல்லி : முன்னாள் இந்திய அணி மற்றும் சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா ஆகியோர் கடந்த சனிக்கிழமை சர்வதேச போட்டிகளில் இருந்து தங்களது ஓய்வை அடுத்தடுத்து அறிவித்துள்ளனர்.

Recommended Video

ஓய்வுக்கு பிறகு நானும் தோனியும் கட்டிப்பிடிச்சு அழுதோம்:சுரேஷ் ரெய்னா உருக்கம்

இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் இவர்களது பார்ட்னர்ஷிப் குறித்து ஐசிசி தனது டிவிட்டர் பக்கத்தில் எண்ணிக்கையை வெளியிட்டு ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

ICC Pays Tribute To MS Dhoni-Suresh Raina Partnership

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இவர்கள் இருவரும் இணைந்து 73 இன்னிங்ஸ்களில் விளையாடி, 3,585 ரன்களை குவித்துள்ளனர். இதன் சராசரி 56.90ஆக உள்ளது. மேலும் கடந்த 2011ல் நடைபெற்ற உலக கோப்பை தொடர் மற்றும் 2013ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலும் பார்ட்னர்ஷிப்பில் விளையாடியுள்ளனர்.

சிஎஸ்கேவின் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னாவின் நட்பு கிரிக்கெட் உலகில் மிகவும் பிரசித்தம். இவர்கள் இருவரும் இணைந்து சிஎஸ்கே அணியை மிகவும் சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இருவரும் அடுத்தடுத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர்.

ICC Pays Tribute To MS Dhoni-Suresh Raina Partnership

இவர்களின் ஓய்வு குறித்து கடந்த இரு தினங்களாக சர்வதேச அளவில் அனைத்து வீரர்களும் வாழ்த்துக்களையும் வருத்தங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஐசிசி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், இவர்களுக்குள் உள்ள நட்பு குறித்து சிலாகித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் இவர்கள் இருவரும் இணைந்து 73 இன்னிங்ஸ்களில் பார்ட்னர்ஷிப் அமைத்து 3,585 ரன்களை 56.90 சராசரியுடன் குவித்துள்ளதை குறிப்பிட்டு, 2011 உலக கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி பார்ட்னர்ஷிப்பையும் சுட்டிக் காட்டியுள்ளது. இருவரும் கட்டித்தழுவியிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

Story first published: Monday, August 17, 2020, 14:50 [IST]
Other articles published on Aug 17, 2020
English summary
International Cricket Council paid tribute to Dhoni & Raina on Twitter
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X