For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலகக்கோப்பையில் திடீர் மாற்றம்.. ஐசிசி போட்டுள்ள புதிய திட்டம்.. இனி கடும் போட்டி நிலவும்!

மும்பை: கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான டி20 உலகக்கோப்பையில், பங்குபெறும் அணிகளின் எண்ணிக்கை குறித்து ஐசிசி அதிரடி முடிவை எடுத்துள்ளது.

உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு டி20 ஃபார்மட் பெரும் விருந்து படைத்து வருகிறது. பவுண்டரிகள், சிக்ஸர்கள் என ரன் மழையையே அவர்கள் பெரியளவில் விரும்புகின்றனர்.

பக்கா ரெடி.. இங்கிலாந்தில் மீண்டும் ஐபிஎல்.. 'அந்த' உத்தரவு மட்டும் பாக்கி - செம மேட்டர்பக்கா ரெடி.. இங்கிலாந்தில் மீண்டும் ஐபிஎல்.. 'அந்த' உத்தரவு மட்டும் பாக்கி - செம மேட்டர்

அவர்களின் உற்சாகத்திற்கு தீனி போடும் விதமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் டி20 உலகக்கோப்பை நடத்தப்பட்டு வருகிறது.

உலகக்கோப்பை

உலகக்கோப்பை

உலகக்கோப்பை தொடருக்காக தற்போது வரை 16 நாடுகளை சேர்ந்த அணிகள் ஐசிசி-ஆல் தேர்வு செய்யப்பட்டு விளையாடி வருகிறது. இந்நிலையில் அதன் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்த ஐசிசி முடிவு செய்துள்ளது. டி20 வடிவ கிரிக்கெட்டை உலகளவில் இன்னும் பிரபலப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எப்போது அமல்

எப்போது அமல்

இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. ஆனால் இந்த தொடரில் வழக்கம் போல 16 அணிகளே பங்கு பெறும் என்றும் புதிய திட்டமானது 2024ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இருந்துதான் அமல்படுத்தப்படும் எனக்கூறப்படுகிறது. அவை ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் என மொத்தம் 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. ஏற்கனவே மகளிர் உலகக்கோப்பையில் அணிகளின் எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக ஐசிசி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாள் போட்டி தொடர்

ஒரு நாள் போட்டி தொடர்

இதே போன்று 50 ஓவர் உலகக்கோப்பையிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. கடந்த சில வருடங்களாக 50 ஓவர் உலகக்கோப்பையில் அணிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு 16 அணிகள், 2011ம் ஆண்டு மற்றும் 2015ம் ஆண்டு தொடரில் 14 அணிகள், கடைசியாக நடைபெற்ற 2019ம் ஆண்டு உலகக்கோப்பையில் 10 அணிகள் மற்றுமே பங்குபெற்றது. இதற்கு தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களின் அழுத்தமே காரணமாக கூறப்படுகிறது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. இதற்காக சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பிசிசிஐ ஆதரவு தெரிவித்துள்ளது. ஒரு வேளை ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டால் பல நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கு பெற்று மேலும் சுவாரஸ்யமடையும்.

Story first published: Friday, May 14, 2021, 15:49 [IST]
Other articles published on May 14, 2021
English summary
ICC planning to expand the Teams Numbers that participating in T20 World Cup
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X