For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதலில் 85… அப்படியே ஜீரோ..! வீரர்கள் இனிமே தப்பிக்கவே முடியாது..! ஐசிசியின் அசத்தல் பிளான்

Recommended Video

Stop Clock : புதிய விதிமுறையை கொண்டுவரும் ஐசிசி.. கலக்கத்தில் கேப்டன்கள்- வீடியோ

துபாய்: டி 20, குறைந்த ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறையை கொண்டு வருகிறது ஐசிசி.

டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் அணிகள் தங்கள் ஓவர்களை முடிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதனால் போட்டி முடிவடைய நீண்ட நேரம் ஆகி, அது பார்வையாளர்களுக்கும் சோர்வை ஏற்படுத்துகிறது.

பேட்ஸ்மென்களின் கவனமும் சிதறுகிறது. நெருக்கடி நேரங்களில் பேட்ஸ் மென்கள், நடுவர்கள் தயாராக இருக்கும் போது பீல்டிங் அமைக்க நீண்ட நேரம் எடுத்து கொள்வதால் அனைவரையும் வெறுப்பேற்றுகிறது. அதனால் கிரிக்கெட் ஆட்டத்தின் விறுவிறுப்பு குறைந்து பார்வையாளர்களின் சுவாரஸ்யமும் குறைகிறது.

அபராதம் விதிப்பு

அபராதம் விதிப்பு

போட்டிகள் முடிய கூடுதல் நேரமும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அதற்காக தான் அபராத முறை, தகுதியிழப்புப் புள்ளிகள் ஆகிய முறை கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது மாறாக கேப்டனை ஒரு போட்டியில் அல்லது 4 போட்டிகளில் உட்கார வைப்பது என்ற விதிமுறை போய் அணி மொத்தத்திற்கும் அபராதம் விதிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஸ்டாப் கிளாக் முறை

ஸ்டாப் கிளாக் முறை

இந்நிலையில் அபராத முறை குறித்து ஐசிசி தெரிவித்துள்ளதாவது: டி 20, குறைந்த ஓவர் போட்டிகளில் ஸ்டாப் கிளாக் முறை கொண்டு வரப்படுகிறது. அதாவது, டி20 போட்டி தொடங்கும் முன்பாக 85 நிமிடங்கள் என்று கடிகாரம் காட்டும் முதல் ஓவரிலிருந்து அது தொடங்கி பிறகு அது குறைந்து கொண்டே வந்து பின்னர் ஜீரோவில் நிற்கும்.

ஜீரோ வரும்

ஜீரோ வரும்

நோக்கம் என்னவெனில் வீரர்கள், பார்வையாளர்கள் நடுவர்கள் ஆகியோ ருக்கும் தெரிய வேண்டும். கடிகாரம் ஜீரோ என்று காட்டும் போது பவுலிங் அணி தன் கடைசி ஓவரை வீச தொடங்கியிருக்க வேண்டும்.

இடையூறு கணக்கீடு

இடையூறு கணக்கீடு

ஆனால் அதே வேளையில் டிஆர்எஸ் முறையீடு, வீரர்கள் காயம் ஆகிய வற்றினால் ஆட்டத்தில் இடையூறு ஏற்படும். அப்போது தேவைப்பட்டால் வீணாகும் கால அளவை நடுவர் கடிகார பட்டானை அழுத்தி மீண்டும் கூட்டுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, July 29, 2019, 12:44 [IST]
Other articles published on Jul 29, 2019
English summary
Icc plans to bring stop clock method in t 20 and limited over match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X