For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி விதி ஜோக்.. அபத்தம்..நியாயமில்லை..! இங்கிலாந்தின் வெற்றிக்கு எதிராக பொங்கும் பிரபலங்கள்

Recommended Video

WORLD CUP 2019 FINALS | இங்கிலாந்தின் வெற்றிக்கு எதிராக பொங்கும் பிரபலங்கள்- வீடியோ

லார்ட்ஸ்: அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து சாம்பியன் என்ற சொன்ன ஐசிசியின் விதி அபத்தமானது என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் உள்ளிட்ட பல பிரபலங்கள் காட்டமாக கூறியிருக்கிறனர்.

உலகக் கோப்பை பைனலில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவர்களில் தலா 241 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் முறை கடைப் பிடிக்கப்பட்டது. அதிலும், 2 அணிகளும் சமமான ரன்களையே (அதாவது 15 ரன்கள்) எடுத்தன.

அதனால், பவுண்டரிகளின் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப் பட்டது. அந்த விதியின்படி போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். எனவே, அதிக பவுண்டரிகள் ( 26) அடித்த இங்கிலாந்து (26) வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, உலக கோப்பை வழங்கப் பட்டது. ஐசிசியின் இந்த விதியால் நியூசிலாந்தின் கோப்பை கனவு தகர்ந்தது.

விதி எண் 19.8ஐ மீறி விட்டீர்கள்.. நியூஸிக்கு எதிராக நேற்று சதி நடந்ததா? அதிர வைக்கும் பின்னணி! விதி எண் 19.8ஐ மீறி விட்டீர்கள்.. நியூஸிக்கு எதிராக நேற்று சதி நடந்ததா? அதிர வைக்கும் பின்னணி!

விதியை ஏற்க முடியவில்லை

விதியை ஏற்க முடியவில்லை

ஆனால், இந்த போட்டியைப் பொருத்தவரை இங்கிலாந்து வெற்றி பெறவும் இல்லை, நியூசிலாந்து தோல்வியடையவும் இல்லை என்று தான் சொல்லலாம். பவுண்டரியின் அடிப்படையில் வெற்றி என்ற விதியை, கிரிக்கெட்டை உண்மையாக நேசிப்பவர்கள், விமர்சகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கம்பீர் காட்டம்

கம்பீர் காட்டம்

இதுபற்றி பலரும் தங்கள் கருத்துக்களையும், ஆதங்கத்தையும் சமூக வலைத் தளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் டுவிட்டர் பக்கத்தில், ஐசிசி விதியை கடுமையாக விமர்சித்து உள்ளார்.

புரியாத விதி

அவர் கூறியதாவது: இந்த விதியை பயன்படுத்தி எப்படி இறுதி முடிவு எடுத்தார்கள்? என்றே புரியவில்லை. ஐசிசியின் இந்த விதி அபத்தமான ஒன்று. போட்டி டையில் முடிந்திருப்பதால், கடைசி வரை சிறப்பாக விளையாடிய 2 அணிகளுக்கும் வாழ்த்துகள். என்னை பொறுத்தவரை 2 அணிகளுமே வெற்றியாளர்கள்தான் என்று கூறியுள்ளார்.

விதிகள் விதிகளே தான்

இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கும் இதுபற்றி கருத்து கூறியிருக்கிறார். அவர் தெரிவித்திருப்பதாவது: ஐசிசியினன் விதிக்கு நான் உடன்பட வில்லை. ஆனால், விதிகள் விதிகள்தான்.

வரலாற்றில் சிறப்பு

வரலாற்றில் சிறப்பு

உலக கோப்பையை வென்ற இங்கிலாந்துக்கு எனது வாழ்த்துகள். இறுதிவரை நியூசிலாந்து போராடியது மனதில் நிற்கிறது. இது வரலாற்றில் இடம்பெற்ற சிறப்பு மிக்க இறுதிப்போட்டி என்றார்.

ஏற்க முடியாது

முன்னாள் வீரர் முகமது கைபும், ஐசிசியின் விதியை ஏற்றுக் கொள்ள முடிய வில்லை என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

கோப்பை பகிர்வு

கோப்பை பகிர்வு

இந்த கடினமான பவுண்டரி விதியை ஜீரணிப்பது மிகவும்` கடினம். வெற்றியாளரை தீர்மானிக்க வேண்டும் தான். ஆனால், அதிக பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றியை தீர்மானிப்பதை விட, கோப்பையை பகிர்ந்து கொள்வது சிறப்பாக இருந்திருக்கும் என்றார்.

ஐசிசியின் ஜோக்

நியூசிலாந்ததின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஸ்காட் ஸ்டைரி, ஐசிசியின் விதியை கேலி செய்திருக்கிறார். அவர் தமது டுவிட்டரில் கூறி இருப்பதாவது: நல்ல காரியம் செய்திருக்கிறது ஐசிசி. இந்த முடிவு ஜோக். இறுதி போட்டியில் விளையாடிய இரண்டு சாம்பியன் அணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார்.

ரன்கள், விக்கெட்டுகள்

ரன்கள், விக்கெட்டுகள்

ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான டீன் ஜோன்ஸ் கூறி இருப்பதாவது: டக்வொர்த் லீவிஸ் முறை உண்மையில் ரன்கள் மற்றும் விக்கெட் இழப்புகளை மையமாக கொண்டு நடைமுறைப்படுகிறது.

நியாயமில்லை

இறுதிப் போட்டியில் மட்டும், பவுண்டரிகள் அடித்ததை மட்டுமே அடிப்படையாக கொண்டு முடிவு செய்வதா? என் கருத்தில் நியாயம் இல்லைதான். முடிவு பார்ப்பதற்கு நன்றாக இருந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Story first published: Monday, July 15, 2019, 12:16 [IST]
Other articles published on Jul 15, 2019
English summary
Icc rules are joke, un acceptable says former players.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X