For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா, பாக். போட்டி மாதிரி லார்ட்சிலும் அந்த சம்பவம்..? ஐசிசி அதிரடி உத்தரவு

Recommended Video

WORLD CUP 2019 NS VS ENG FINALS | இந்தியா, பாக். போட்டி மாதிரி லார்ட்சிலும் அந்த சம்பவம்?

லார்ட்ஸ்: உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்தின் மேல் விமானங்கள் ஏதும் பறக்கக் கூடாது என்று ஐசிசி அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.

அரசியலிலும், விளையாட்டிலும் பரம வைரிகளான பாகிஸ்தான், இந்தியா அணிகள் பங்கேற்ற உலக கோப்பை லீக் ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த போட்டியில் பலூசிஸ்தான் மற்றும் காஷ்மீர் தொடர்பான அரசியல் செய்திகளுடன் கொடிகளை ஏந்திய விமானங்கள் மைதானத்தின் மீது பறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

இதனைத்தொடர்ந்து அத்துமீறி பறந்த விமானங்கள் குறித்து அதிகாரப்பூர்வ புகார்கள் ஐசிசி மற்றும் பிசிசிஐ தரப்பில் அளிக்கப்பட்டது. புகார்களின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தடை விதிக்கப்பட்ட பகுதி

தடை விதிக்கப்பட்ட பகுதி

இந் நிலையில் தற்போது இறுதி போட்டியின் போது இவ்வாறான அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க மைதானத்தை சுற்றியுள்ள பகுதி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக (no fly zone) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடை வரும் ஜூலை 15ம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை ஐசிசி கிரிக்கெட் நிர்வாக குழு வெளியிட்டு இருக்கிறது.

பலுசிஸ்தான் நீதி

பலுசிஸ்தான் நீதி

முன்னதாக கடந்த ஜூன் 29ம் தேதி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியபோது மைதானத்துக்கு மேலே, பலுசிஸ்தானுக்கு நீதி வேண்டும் என்ற பேனரை சுமந்தபடி விமானம் ஒன்று பறந்தது. அதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கண்டனம் தெரிவித்திருந்தது.

காஷ்மீர் நீதி

காஷ்மீர் நீதி

தொடர்ந்து கடந்த 6ம் தேதி இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது, காஷ்மீருக்கு நீதி வேண்டும் என்ற பேனர் விமானம் மூலம் பறக்க விடப்பட்டது. அந்த விமானம் பறந்த சில நிமிடங்களிலேயே மீண்டும் மைதானத்துக்கு மேலே வலம் வந்த அதே விமானத்தில், இனப் படுகொலையை இந்தியா நிறுத்துக, காஷ்மீரை சுதந்திரமாக்கு என்ற வாசகம் அடங்கிய பேனர் பறந்தது.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

இதையடுத்து போட்டி நடந்து கொண்டிருந்த போது 3வது முறையாக இனப் படுகொலைக்கு உதவுவதை தவிர்க்கவும் என்ற வாசகத்துடன் விமானம் பறந்தது. அதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, ஐசிசி உதவியுடன், பிசிசிஐ வழக்கு தொடர்ந்தது.

Story first published: Sunday, July 14, 2019, 9:57 [IST]
Other articles published on Jul 14, 2019
English summary
Icc strictly announced no fly zone area in and around Lords.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X