For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2022ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்.. சூர்யகுமார் யாதவ்க்கு கிடைத்த கவுரவம்.. விவரம்

மும்பை : 2022 ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த t20 கிரிக்கெட் வீரருக்கான விருது இன்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற சூரிய குமார் யாதவ், சிக்கந்தர் ராசா, சாம்கரன், முஹம்மது ரிஸ்வான் ஆகிய நான்கு வீரர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதில் யாருக்கு இந்த விருது என்று நாம் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. காரணம் டி20 கிரிக்கெட்டில் புதிய இலக்கணத்தையே எழுதி தனக்கென தனி ரசிகர்கள் படையை உண்டாக்கி மாஸ் காட்டி வருபவர் சூரியகுமார் யாதவ்.

அவரை தவிர வேறு யார் இந்த விருதை பெற தகுதியான நபராக இருக்க முடியும்.
கடந்த ஆண்டு 31 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய சூரியகுமார் யாதவ் 1164 ரன்கள் அடித்திருக்கிறார்.

துணை கேப்டனாக மாறிய சூர்யகுமார் யாதவ்.. இது சரியான முடிவா ? சாதகம் என்ன? பாதகம் என்ன? துணை கேப்டனாக மாறிய சூர்யகுமார் யாதவ்.. இது சரியான முடிவா ? சாதகம் என்ன? பாதகம் என்ன?

 ஆயிரம் ரன்கள்

ஆயிரம் ரன்கள்

இதில் சராசரியாக ஒரு இன்னிங்ஸில் 46 ரன்கள் அடித்துள்ளார். சூரியகுமார் யாதவின் ஸ்டிரைக் ரேட் 187.43 என்ற அளவில் உள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல்முறையாக ஆயிரம் ரன்கள் கடந்த இந்திய வீரர் என்றும் சர்வதேச t20 தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த வீரர் போன்ற சாதனைகளை சூரியகுமார் யாதவ் படைத்திருக்கிறார்.

அதிக சிக்சர்கள்

அதிக சிக்சர்கள்

2022 ஆம் ஆண்டில் மட்டும் சூரியகுமார் யாதவ் 68 சிக்ஸர்களை விளாசி இருக்கிறார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். மேலும் இந்திய அணிக்காக 2022 ஆம் ஆண்டு இரண்டு சதம் மற்றும் ஒன்பது அரை சதங்களை சூரியக்குமார் அடித்துள்ளார்.டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சூரியகுமார் யாதவும் ஆறு இன்னிங்ஸில் மூன்று அரை சதம் அடித்தார்.

சதம்

சதம்

இதில் அவருடைய சராசரி 60 என்ற அளவில் இருந்தது. இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 189 என்ற அளவில் இருந்தது. சூரியகுமார் யாதவ் புத்தாண்டிலே தற்போது மூன்றாவது சதத்தை அடித்திருக்கிறார். இதன் மூலம் 890 புள்ளிகளை தரவரிசை பட்டியலில் சூரியகுமாரர் யாதவ் பெற்றுள்ளார். 2022 ஆம் ஆண்டில் சூரியகுமார் பல ஸ்பெஷல் இன்னிசை ஆடி இருந்தாலும், இங்கிலாந்துக்கு எதிராக 55 பந்தில் 117 ரன்கள் அடித்தது ரசிகர் மனதில் இன்றும் நீங்காமல் உள்ளது.

ரேணுகா சிங்

ரேணுகா சிங்

இதேபோன்று வளர்ந்து வரும் ஐசிசி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை இந்தியாவில் ரேணுகா சிங் பெற்றுள்ளார். 2022 ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் 18 விக்கெட் களையும் டி20 கிரிக்கெட்டில் 22 விக்கெட்டுகளையும் ரேணுகா சிங் வீழ்த்திருக்கிறார். மொத்தமாக 29 போட்டியில் 40 விக்கெட்டுகளை ரேணுகாசிங் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

Story first published: Wednesday, January 25, 2023, 18:49 [IST]
Other articles published on Jan 25, 2023
English summary
ICC T20 Player of the year 2022 - suryakumar yadav won the prestigious award 2022ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்.. சூர்யகுமார் யாதவ்க்கு கிடைத்த கவுரவம்.. விவரம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X