For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவின் தோல்விக்கு பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல் எப்படி இருக்கு..??

கேப் டவுன்: டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மறுவாழ்வு அளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்டது தான் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்

இரண்டு ஆண்டுகள் நடைபெறும் போட்டிகளை வைத்து யார் முதல் 2 இடத்தில் உள்ளார்களோ, அவர்களுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெறும்

அப்படி, கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றது

சீனியர்களுக்கு கல்தா.. இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரர்கள்..!!சீனியர்களுக்கு கல்தா.. இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரர்கள்..!!

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

இந்த நிலையில், 2021-23ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் இழந்தது. இதே போன்று நியூசிலாந்து, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது. சிட்னியில் நடைபெற்ற புத்தாண்டு டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது.

தென்னாப்பிரிக்கா முன்னேற்றம்

தென்னாப்பிரிக்கா முன்னேற்றம்

இதனால் இந்த வார புள்ளி பட்டியல் அதிரடி மாற்றங்களை கண்டுள்ளது. 100 சதவீத புள்ளிகளுடன் இலங்கை முதலிடத்தில் உள்ளது. ஆஷஸ் 4வது டெஸ்ட் டிராவானதால் ஆஸ்திரேலியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 75 சதவீத புள்ளிகளுடன் பாகிஸ்தான் 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

இந்தியாவுக்கு சரிவு

இந்தியாவுக்கு சரிவு

4வது இடத்தில் இருந்த இந்திய அணி, தொடரை இழந்ததால் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த பட்டியலில் 8வது இடத்தில் இருந்த நடப்பு டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்து அணி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 25 சதவீத புள்ளிகளுடன் வங்கதேச அணி 7வது இடத்தில் உள்ளது. 8வது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகளும், 9வது இடத்தில் இங்கிலாந்து அணியும் உள்ளது.

அடுத்தது என்ன?

அடுத்தது என்ன?

இந்திய அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி, 3 போட்டியில் தோல்வி, 2 போட்டிகள் டிரா செய்துள்ளது. ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக இந்தியாவின் 3 புள்ளிகள் குறைக்கப்பட்டது.. இலங்கை மற்றும் அஸதிரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணிலும், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடலும் இந்தியா அனைத்து போட்டிகளையும் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற வாய்ப்புள்ளது.

Story first published: Saturday, January 15, 2022, 12:04 [IST]
Other articles published on Jan 15, 2022
English summary
ICC Test championship 2022 Points table as of Jan 14th இந்தியாவின் தோல்விக்கு பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியல் எப்படி இருக்கு..??
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X