For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாக். தோல்வியால் இந்தியாவுக்கு அடித்த லக்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பு பிரகாசம்..விவரம்

மும்பை :இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான அணி தோல்வியை தழுவியது.

இதனையடுத்து உலகத் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் உள்ள மற்ற அணிகளுக்குள் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிக்கு மறுமலர்ச்சி கொடுக்கும் விதமாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற ஐசிசி திட்டமிட்டு இருந்தது.

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.. உலகக்கோப்பையில் இந்திய தொடக்க வீரர் இவர்தான்.. யுவராஜ் சிங் நம்பிக்கை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.. உலகக்கோப்பையில் இந்திய தொடக்க வீரர் இவர்தான்.. யுவராஜ் சிங் நம்பிக்கை

இறுதிப் போட்டி

இறுதிப் போட்டி

இதன்படி இரண்டு ஆண்டுகள் நடைபெறும் போட்டிகளில் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிகளில் விளையாடும். முதல் முறையாக நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் தகுதி பெற்றன. இதில் நியூஸிலாந்து சாம்பியன்ஷிப் பட்டதை வென்றது.தற்போது அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.

புள்ளி பட்டியல்

புள்ளி பட்டியல்

இந்த சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தற்போது ஆஸ்திரேலியா முதல் இடத்திலும் ,தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இலங்கை அணி மூன்றாவது இடத்திலும் இந்தியா நான்காவது இடத்திலும் ,பாகிஸ்தான் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.தற்போது பாகிஸ்தான அணி தங்களது சொந்த மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருந்தது. இதில் அனைத்திலுமே வெற்றி பெற்றால் பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு சென்றிருக்கும். ஆனால் பாகிஸ்தான அணி ராவல்பிண்டி போட்டியில் தோல்வியை தழுவியதால் அந்த அணியின் வாய்ப்பு மற்ற அணியை நம்பியே இருக்கிறது.

இந்தியாவின் வாய்ப்பு

இந்தியாவின் வாய்ப்பு

தற்போது பாகிஸ்தான அணியின் தோல்வியால் இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் எஞ்சி உள்ள டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் நடை கட்ட வேண்டியது தான்.தற்போது இந்திய அணி இறுதி போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்ற வேண்டும். அப்படி நடந்தால் வரும் பிப்ரவரி மாதம் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் தோல்வியை தழுவினாலும் கூட இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

சாதகம்

சாதகம்

இது பாகிஸ்தான் அடைந்த தோல்வியால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள சாதகமாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் முழுமையாக கைப்பற்றினால் அவர்கள் இறுதிப் போட்டிக்கு சென்று விடுவார்கள் .இதனால் இந்தியா அடுத்த இரண்டு மாதங்கள் விளையாட உள்ள வங்கதேசம் ஆஸ்திரேலியா ஆகிய எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Story first published: Monday, December 5, 2022, 23:08 [IST]
Other articles published on Dec 5, 2022
English summary
ICC Test championship 2023 Final - India chances boosted after Pakistan loss against England பாக். தோல்வியால் இந்தியாவுக்கு அடித்த லக்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பு பிரகாசம்..விவரம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X