For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

30 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றம்.. இந்தியா விளையாடும் டெஸ்ட் அட்டவணை வெளியீடு

துபாய்: டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்ப்பிக்கும் வகையில் இந்திய அணி அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிக அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்திய அணி விளையாடும் போட்டியில் பல்வேறு மாற்றங்களை ஐசிசி செய்துள்ளது.

அதன்படி இந்திய அணி இனி டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விளையாடும் சூழல் உருவாகியுள்ளது.

“பிட்ச்-ல் இப்படி ஒரு மாற்றமா?”.. 2வது ODIல் இந்திய அணி மோசமாக தோற்றது ஏன்?.. ரோகித் சர்மா விளக்கம்! “பிட்ச்-ல் இப்படி ஒரு மாற்றமா?”.. 2வது ODIல் இந்திய அணி மோசமாக தோற்றது ஏன்?.. ரோகித் சர்மா விளக்கம்!

 புதிய மாற்றம்

புதிய மாற்றம்

இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவும், இங்கிலாந்தும் மற்றும் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதும் போட்டிகள் ரசிகர்களால் அதிக அளவு பின் தொடரப்படுகிறது. இதனை கருத்தில் கொண்ட ஐசிசி 30 ஆண்டுகளுக்குப் பிறகு இனி இந்தியா-ஆஸ்திரேலியா விளையாடும் பார்டர் கவாஸ்கர் தொடரை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக விளையாடும் வகையில் மாற்றி அமைத்துள்ளது.

ஆஸி தொடர்

ஆஸி தொடர்

ஏற்கனவே இங்கிலாந்துடன் இந்தியா ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவிடம் இந்தியா ஐந்து போட்டிகளில் உள்ளூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலும் விளையாடும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள அட்டவணைப்படி இந்திய அணி 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

இதேபோன்று ஆஸ்திரேலிய அணி 2027 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது. இதேபோன்று இந்திய அணி 2024 ஆம் ஆண்டு உள்ளூரில் இங்கிலாந்து அணியை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குச் சென்று ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது.

 எத்தனை போட்டிகள்

எத்தனை போட்டிகள்

இதைத் தவிர நியூசிலாந்து அணியுடன் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது.2023 ஆம் ஆண்டிலிருந்து 27 ஆம் ஆண்டு வரை இந்திய அணி 38 டெஸ்ட் போட்டிக ளில் விளையாடுகிறது . அதிகபட்சமாக இங்கிலாந்து 42 டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 41 டெஸ்ட் போட்டிகளிலும், பங்களாதேஷ் 34 டெஸ்ட் போட்டிகளிலும், நியூஸிலாந்து 32 டெஸ்ட்களிலும் விளையாடுகிறது.

Story first published: Saturday, July 16, 2022, 21:24 [IST]
Other articles published on Jul 16, 2022
English summary
ICC Test FIxture released for Next 5 Years - India is Playing 38 test matches30 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் மாற்றம்.. இந்தியா விளையாடும் டெஸ்ட் அட்டவணை வெளியீடு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X