For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி-ன் புதிய டெஸ்ட் தரவரிசை வெளியானது.. மீண்டும் ‘ராஜா’வான ஜடேஜா.. விராட் கோலியின் நிலை என்ன?

மும்பை: ஐசிசி-ன் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல்களை ஐசிசி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான தரவரிசையை வெளியிட்டது.

 கோலி, புஜாரா அடுத்தடுத்து அவுட்.. ரிஷப் பண்ட்டுக்கு கோலி அனுப்பிய அவசர கோலி, புஜாரா அடுத்தடுத்து அவுட்.. ரிஷப் பண்ட்டுக்கு கோலி அனுப்பிய அவசர

இந்நிலையில் தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான மாற்றி அமைக்கப்பட்ட புதிய தரவரிசையை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டிக்காக் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளார்.

பேட்டிங்

பேட்டிங்

பேட்டிங் தரவரிசையை பொறுத்தவரை டாப் ஆர்டரில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஆஸ்திரேலிய வீரர் 891 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அதே போல நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 886 ரன்களுடன் 2வது இடத்தில் நீடிக்கிறார். ஆனால் தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டிக்காக் மீண்டும் டாப் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். தென்னாப்பிரிக்க அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரில் அதிக ரன் அடித்த டிகாக் ( 237 ரன்கள்) 717 புள்ளிகளுடன் 10வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

இந்திய அணி கேப்டன் விராட் கோலி 814 புள்ளிகளுடன் 4வது இடத்தை தக்கவைத்துள்ளார். அதே போல இவருடன் சேர்ந்து இந்திய வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரும் டாப் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் இருவரும் தலா 747 புள்ளிகளுடன் 6வது இடத்தில் நீடிக்கின்றனர்.

பவுலிங் தரவரிசை

பவுலிங் தரவரிசை

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். இந்திய வீரர் அஸ்வின் 850 புள்ளிகளுடன் தொடர்ந்து 2வது இடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப்பட்டியலின் டாப் 10 இடங்களில் அஸ்வினை தவிர வேறு எந்த இந்திய வீரரும் இடம் பெறவில்லை.

மீண்டும் முதலிடம்

மீண்டும் முதலிடம்

ஆல்ரவுண்டர்கள் தரவரிசைப்பட்டியலை பொறுத்தவரை இந்திய வீரர் ஜடேஜா, மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார். ஜடேஜா 386 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு சென்றுள்ளார். 384 புள்ளிகளுடன் ஜேசன் ஹோல்டர் 2ம் இடத்திற்கு சென்றுள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் 353 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளார்.

Story first published: Wednesday, June 23, 2021, 21:57 [IST]
Other articles published on Jun 23, 2021
English summary
ICC Men's Test Player Rankings are Out. Jadeja Takes over Holder as No.1 in ICC Men's Test Allrounder Rankings
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X