For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸ்திரேலியாவை திராட்டில் விட்ட ரூட் நம்பர் 1... 10வது இடத்தில் நம்ம ஊரு கோஹ்லி

நாட்டிங்காம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் அட்டகாசமாக பேட் செய்து வரும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் விராத் கோஹ்லி 10வது இடத்தில் இருக்கிறார்.

வலது கை பேட்ஸ்மேனான ஜோ ரூட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல உதவியாக இருந்தவர்.

2வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஏப் டிவில்லியர்ஸ் நீடிக்கிறார். அதேசமயம், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் 3வது இடத்தில் இருக்கிறார். இந்தியர்களில் கோஹ்லியைத் தவிர வேறு யாரும் டாப் 10ல் இல்லை.

917 புள்ளிகளுடன் ரூட் முதலிடம்

917 புள்ளிகளுடன் ரூட் முதலிடம்

இங்கிலாந்தின் ஜோ ரூட் 917 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 890 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பெற்றுள்ளார்.

3வது இடத்தில் ஸ்மித்

3வது இடத்தில் ஸ்மித்

3வது இடத்தில் 884 புள்ளிகளுடன் ஸ்டீவன் ஸ்மித் இருக்கிறார். தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா 881 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறார்.

சங்கக்கராவுக்கு 5வது இடம்

சங்கக்கராவுக்கு 5வது இடம்

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெறப் போகும் இலங்கையின் குமார சங்கக்கரா 874 புள்ளிகளுடன் 5வது இடத்தில் நீடிக்கிறார். இலங்கை கேப்டன் ஏஞ்சலோ மாத்யூஸ் 860 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறார்.

7வது இடத்தில் யூனிஸ் கான்

7வது இடத்தில் யூனிஸ் கான்

பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் 829 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், நியூசிலாந்தின் கனே வில்லியம்சன் 813 புள்ளிகளுடன் 8வது இடத்தில் உள்ளார்.

9வது இடத்தில் ரோஜர்ஸ்

9வது இடத்தில் ரோஜர்ஸ்

ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் 9வது இடத்தில் நீடிக்கிறார். இவருக்குக் கிடைத்துள்ள புள்ளிகள் 763 ஆகும்.

10வது இடத்தில் கோஹ்லி

10வது இடத்தில் கோஹ்லி

இந்திய டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லி தொடர்ந்து பார்மில் இல்லாத நிலையிலும் டாப் 10க்குள் வந்துள்ளார். அவர் 755 புள்ளிகளுடன் 10வது இடத்தில் நிற்கிறார்.

Story first published: Monday, August 10, 2015, 12:05 [IST]
Other articles published on Aug 10, 2015
English summary
England's Joe Root has become the number one Test batsman in the world in the latest rankings released by the International Cricket Council (ICC). South Africa's AB de Villiers has remained at second spot while Root swapped places with Australia's Steve Smith, who is now third. India's Test captain Virat Kohli has gained a position to be at 10th.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X