For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

6 இந்திய வீரர்களுக்கு கொரோனா..!! சிக்கலை தாண்டி சாதனை படைத்த U-19 இந்திய அணி..!!

தாரவ்பா: ஐ.சி.சி. U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. U-19 இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் U-19 தென்னாப்பிரிக்காவை வென்றது.

இந்த நிலையில், அடுத்த லீக் ஆட்டம் அயர்லாந்துடன் U-19 இந்தியா மோத இருந்தது.

அப்போது U-19 இந்திய வீரர்கள் சிலருக்கு லேசான காய்ச்சல் அடித்தது. இதனையடுத்து கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

“அவங்க தான் சொதப்புனாங்க.. இனி பார்த்துக்கிறேன்” இந்திய அணியின் தோல்வி.. கே.எல்.ராகுல் குற்றச்சாட்டு “அவங்க தான் சொதப்புனாங்க.. இனி பார்த்துக்கிறேன்” இந்திய அணியின் தோல்வி.. கே.எல்.ராகுல் குற்றச்சாட்டு

6 வீரர்களுக்கு கொரோனா

6 வீரர்களுக்கு கொரோனா

இதில் U-19 இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல், துணை கேப்டன் ரஷித் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு முதல்கட்ட சோதனையில் கொரோனா இருந்ததாக வந்துள்ளது. இதனையடுத்து, 6 வீரர்களையும் பி.சி.சி.ஐ. தனிமைப்படுத்தியுள்ளது. இதில் இளம் வீரர்கள் சிலர் என்பதால், அவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தினார்களா என்பது குறித்து தகவல் இல்லை

11 பேர்

11 பேர்

மாற்று வீரர்களாக 5 பேர் அறிவிக்கப்பட்டாலும், அவர்கள் யாரும் U-19 இந்திய அணியுடன் அழைத்து வரப்படால் இந்தியாவிலேயே தங்க வைக்கப்பட்டனர். இதனால் அணியில் உடல்தகுதியுடன் இருந்த வெறும் 11 பேரை போட்டு U-19 அயர்லாந்து அணியுடன் பி.சி.சி.ஐ. ஆட வைத்தது. ஆனால், இவ்வளவு தடைகளை உடைத்து இந்திய அணி அசத்தியது.

307 ரன்கள் விளாசல்

307 ரன்கள் விளாசல்

முதலில் பேட் செய்த U-19 இந்திய அணியில் தொடக்க வீரர் ஆங்கிரிஷ், ஹர்னூர் சிங் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தனர்.இறுதியில் ராஜ்வர்தன் ஹங்கேர்கர் 17 பந்துகளில் 5 சிக்சர்கள் விளாசி 39 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் U-19 இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் சேர்த்தது.

Recommended Video

IND vs SA 1st ODI South Africa Beat India by 31 Runs to Take 1-0 Lead | Oneindia Tamil
பி.சி.சி.ஐ. கோரிக்கை

பி.சி.சி.ஐ. கோரிக்கை

308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய U-19 அயர்லாந்து அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கொரோனாவால் இந்திய அணி பாதிக்கப்பட்டாலும் தடைகளை தாண்டி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், 6 இந்திய வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் U-19 இந்திய அணியின் போட்டிகளை ஒத்திவைக்குமாறு பி.சி.சி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.

Story first published: Thursday, January 20, 2022, 11:03 [IST]
Other articles published on Jan 20, 2022
English summary
ICC U-19 World cup 2022 Despite 6 Players covid positive India trash Ireland6 இந்திய வீரர்களுக்கு கொரோனா..!! சிக்கலை தாண்டி சாதனை படைத்த U-19 இந்திய அணி..!!
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X